Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யானையை பறிக்க முடியுமா? விஜய் Vs பிஎஸ்பி யுத்தம்? நடக்கப் போவது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்திற்கு உரிமை கோரும் பிரச்சினை பற்றி விஜய் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? அதன் பின்னால் உள்ள அரசியல் என்ன?

தவெகவின் கட்சிக் கொடியை அதிகாரப்பூர்வமாக கடந்த 22ஆம் தேதி வெளியிட்ட அன்றே பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆனந்தன், விஜய் பார்வைக்கு இந்தக் கோரிக்கை எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அறியாமல் தவறு செய்திருக்கலாம். எனவே நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம் என்று கூறி இருந்தார். ஆனால், அதன்பிறகு கடந்த 10 நாட்களாக அவர் தொடர்ந்து ஊடகங்களில் பேசி வருகிறார். மேலும் விஜய்க்கு நேரடியாகவும் தகவல் அனுப்பி இருக்கிறோம் என்கிறார்.

Vijay BSP

ஆனால், இந்தச் சர்ச்சை குறித்து விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. அப்படி என்றால், இது வேண்டும் என செய்யப்பட்டதா? என்ற சந்தேகத்தை முன் வைக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் சத்தியமூர்த்தி. தமிழக தேர்தல் ஆணையரை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் சந்தித்து இவர் மனுவும் அளித்துள்ளார். இது குறித்து சத்தியமூர்த்தி, "ஒரு கட்சியின் அடையாளமே தேர்தல் சின்னம்தான். அதை வேறு கட்சி எப்படிப் பயன்படுத்த முடியும்? எங்கள் கட்சியின் அரசியல் அடையாளமாக இருக்கும் யானையை வேறு ஒரு கட்சி எந்த வடிவிலும் பயன்படுத்தக் கூடாது. அதுவே எங்கள் நிலைப்பாடு. இதை விஜய் வேண்டும் என்றே செய்துள்ளார்" என்று ஆவேசமாகப் பேசுகிறார்.

இதற்கு முன்னதாக பாமகவின் தேர்தல் சின்னமாக யானைதான் இருந்தது. 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் யானை சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்தான் பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவரை அக்கட்சி யானை மீது அமர்த்தி அவைக்கு அனுப்பி வைத்தது. ஆனால், பிறகு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய அங்கீகாரம் பெற்ற பிறகு யானை சின்னத்தை பாமக இழந்தது. அதற்குப் பதிலாக மாம்பழம் சின்னத்தைப் பெற்றது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டே யானை சின்னத்தை பாமக பறி கொடுத்தது. ஆனால், விஜய் தனது கட்சியின் சின்னமாக யானையைப் பயன்படுத்தவில்லை. மேலும் அவர் தனது கொடியில் 2 யானைகளைப் பயன்படுத்தி உள்ளார். அவரது சின்னம் கட்டாயம் யானையாக இருக்காது. ஆகவே, பகுஜன் சமாஜ் கட்சியின் புகார் குறித்து தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த கோபால்சாமி இது குறித்துப் பேசும்போது இது சிவில் வழக்காகவே அணுக முடியும். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்கிறார். அதை உணர்ந்துதான் பிஎஸ்பி சட்டரீதியாகவும் வழக்கைத் தொடுக்க உள்ளது. ஆனால், உடனடியாக ஒரு அரசியல் கட்சியாகப் பதிலளிக்க வேண்டிய விஜய்யும் அவரது நிர்வாகிகளும் அமைதி காப்பதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என்கிறார்கள் தலித் அமைப்பினர்.

குறிப்பாக இன்றைக்குத் தலித் இயக்கங்கள் ஆக்டிவ் ஆக இருப்பதால், அந்த ஓட்டுகளை இழுக்கவே விஜய் இந்த வேலையைச் செய்துள்ளார் என்கிறார்கள். அம்பேத்கர் அடையாளமாக யானை பயன்படுத்தப்பட்டுள்ளது என செய்தி தொடர்பாளர் லயோலா மணி சொல்கிறார். இதுவரை காமராஜர், அண்ணாவைப் பற்றிப் பேசிய விஜய் இப்போது ஏன் அம்பேத்கர் யானையைக் கையில் எடுத்துள்ளார் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதியின்படி தேர்தல் சின்னம் தொடர்பாகவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒரு கட்சியின் சின்னத்தைக் கொடியில் பயன்படுத்துவது தொடர்பாக விதிகள் வகுக்கப்படவில்லை என்று தேர்தல் சட்டவிதிகளை உணர்ந்த அதிகாரிகள் சிலர் சொல்கிறார்கள். எனவே இதை முன்மாதிரியான வழக்காகக் கொண்டு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்ட வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். கோபால்சாமி கூட இதைத் தேர்தல் ஆணையம் வரம்புக்குள் வராது என்றே சொல்கிறார்.

ஒரு அரசியல் இயக்கமாக தங்களின் கட்சி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு உடனடியாக ஒரு தலைவராகப் பதில் அளிக்கவேண்டும். ஆனால், 2026 தேர்தல் களத்தில்தான் பதிலளிப்பேன் என்று அமைதியாக விஜய் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஒருவேளை கட்சியின் கொடி குறித்து சரித்திர கதையை அவர் விவரிக்க உள்ள மாநாட்டில் கூட இதைப் பற்றி பேசி மைலேஜ் வாங்குவார் என்கிறார்கள் விஜய் பற்றி நன்கு அறிந்த திரை உலக பிரமுகர்கள். இன்னொரு பக்கம் ஒரு யானை சீமான், இன்னொரு யானை விஜய் என்று காமெடியாக சிலர் அரசியல் விளக்கம் அளித்து வருகின்றனர். விஜய் கொடியில் யானையை வைத்தது மட்டும் இல்லை. அவர் பயன்படுத்தி உள்ள வண்ணம் கூட நாதக சாயலில் உள்ளது. கூடவே வெள்ளாளர் கட்சியும் உரிமை கோருகின்றது.

எப்படிப் பார்த்தாலும் இந்தக் கொடி வழக்கு சிவில் வழக்காகப் பதியப்பட்டு விசாரிக்கப்பட்டால், அதன் தீர்ப்பு வருவதற்குள் 2026 தேர்தலே வந்துவிடும். அந்தத் தேர்தலில் ஒருவேளை கட்சி அங்கீகாரத்திற்கான வாக்கு சதவீதத்தைப் பெற்றுவிட்டால் ஆணையம் அதற்கு சட்டரீதியாக அங்கீகாரம் அளித்துவிடும். அதன் பின்னர் ஒன்றும் செய்ய முடியாது. அதற்காகக் கூட விஜய் கட்சியினர் அமைதியாக இருக்கலாம் என்கிறார் ஒரு விஜய் ரசிகர்.

தமிழக வெற்றிக் கழகம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டியாக வருமா என பலர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அந்தக் கட்சி கடைசியில் பிஎஸ்பியுடன் யுத்தம் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அதிமுகவும் திமுகவும் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளத்தைப் போலவே தெரியவில்லை. விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது அன்றைய திமுக தலைவர் கருணாநிதி அமைதி காத்தார்.

அதைப்போலவே திமுகவினர் தேமுதிகவைப் பொருட்படுத்தாததைப் போலவே இருந்தனர். அவர் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவரானது அடுத்து வந்த தேர்தலில் 'பழம் நழுவி பாலில் விழும்' என்றார் கருணாநிதி. அதைப்போல் விஜய் தனது பலத்தை நிரூபித்தால் திமுக வேறு மாதிரியானது நிலைப்பாட்டை எடுக்கும். ஆகவே இப்போது அடக்கி வாசிக்கிறார்கள் என்றே சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+