சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எலான் மஸ்க்கே பார்த்து வாவ் சொன்ன வீடியோ! கண்களை குழப்பிய மாயம்! உங்களுக்கும் அப்படித்தான் தெரியுதா?

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கே பார்த்து வியந்து போன ஆப்டிக்கல் இல்யூஷன் வீடியோ ஒன்று இணையம் முழுக்க மீண்டும் வைரலாகி வருகிறது.

இணையம் முழுக்க ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் இப்போது பல கொட்டிக்கிடக்கின்றன. பார்த்ததும் கண்களை குழப்பும் படங்கள் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள்.

அதாவது ஒரு படத்தை நாம் பார்க்கிறோம் என்றால் அதில் முதலில் ஒரு உருவம் தெரியும்.. பின்னர் சில நிமிடம் உற்று பார்த்தால் வேறு சில உருவங்கள் அதில் தோன்றும்.

இதைத்தான் ஆப்டிக்கல் இல்யூஷன் என்பார்கள். அதாவது கண்களை குழப்பும் மாய படங்கள்.

ஆணா? பெண்ணா? இந்த போட்டோவில் உங்களுக்கு என்ன தெரிகிறது சொல்லுங்க! பின்னணியில் இருக்கும் சர்ப்ரைஸ் ஆணா? பெண்ணா? இந்த போட்டோவில் உங்களுக்கு என்ன தெரிகிறது சொல்லுங்க! பின்னணியில் இருக்கும் சர்ப்ரைஸ்

மனிதனா? பறவையா? இந்த போட்டோவில் என்ன தெரியுது? உங்கள் காதல் வாழ்க்கை பற்றி ஈஸியா சொல்லிடலாம்! மனிதனா? பறவையா? இந்த போட்டோவில் என்ன தெரியுது? உங்கள் காதல் வாழ்க்கை பற்றி ஈஸியா சொல்லிடலாம்!

டிரெண்ட்

டிரெண்ட்

இப்படிப்பட்ட மாய படங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி டிரெண்டாகி வருகிறது. இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை வைத்து உங்களின் கேரக்டரை கூட கணிக்க முடியும். இதற்காக பல ஆப்டிக்கல் இல்யூஷன் டெஸ்டுகள் கூட இணையத்தில் உள்ளன. ஏன் மக்களின் ஐக்யுவை கூட ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் மூலம் கணிக்க முடியும். இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கே பார்த்து வியந்து போன ஆப்டிக்கல் இல்யூஷன் வீடியோ ஒன்று இணையம் முழுக்க மீண்டும் வைரலாகி வருகிறது.

பழைய வீடியோ

பழைய வீடியோ

இது 2020ல் வெளியான வீடியோ ஆகும். ட்விட்டரில் @jagarikin என்ற நபர் வெளியிட்ட வீடியோ ஆகும். இந்த வீடியோவில் இரண்டு க்யூப் உள்ளது. இந்த இரண்டு க்யூபும் அடுத்தடுத்து சுற்றுவது போல இந்த வீடியோவில் இருக்கிறது. இதன் பின்பக்கம் முழுக்க முழுக்க கருப்பு நிறமும், சாம்பல் நிறமும் மாறி மாறி தோன்றிக் கொண்டு இருக்கிறது. இந்த வீடியோவில் என்ன இருக்கிறது, இது எப்படி ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும் என்று நீங்கள் கேட்கலாம். அந்த க்யூப் சுற்றுவதுதான் ஆப்டிக்கல் இல்யூஷனே.

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

இந்த வீடியோவில் உண்மையில் அந்த க்யூப் சுற்றவே இல்லை. ஆம் அந்த க்யூப் வெறுமனே அப்படியேதான் இருக்கிறது. இதன் பின்பக்கம் மட்டும் கலர் மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் மக்களுக்கு இந்த க்யூப் சுற்றுவது போல தோன்றுகிறது. உங்களுக்கும் அந்த க்யூப் சுற்றுவது போல் தெரிகிறதா? நன்றாக உற்றுப்பார்த்து சொல்லுங்கள்.

Recommended Video

    Elon Musk-ன் அடுத்த Project! வரப்போகும் Private Airport
    எலான் மஸ்க்

    எலான் மஸ்க்

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கே இந்த வீடியோவை பார்த்து வியந்து போய் உள்ளார். இந்த வீடியோவின் கீழே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வாவ் என்று கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோவில் க்யூப் சுற்ற என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை. பின்னால் இருக்கும் கலர் மாறுவதன் காரணமாக கண்கள் நம்மை ஏமாற்றுகிறது. மூளை இது போன்ற விஷயங்களுக்கு பழகியதால் இப்படி சுற்றுவது போல தோன்றலாம் என்கிறார்கள்.

    English summary
    Can you solve this optical illusion that made Elon Musk go wow?. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கே பார்த்து வியந்து போன ஆப்டிக்கல் இல்யூஷன் வீடியோ ஒன்று இணையம் முழுக்க மீண்டும் வைரலாகி வருகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X