நீங்க ஜீனியசா?.. படத்தில் மறைந்திருக்கும் "5 நாய்கள்" எங்கே இருக்கு? 10 செகண்டில் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் 5 நாய்கள் மறைந்து உள்ளன. இந்த 5 நாய்கள் எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். 10 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் இடையே அதிகம் டிரெண்ட் ஆகின்றன. ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு தங்கள் கவனிப்புத்திறனை சோதிக்கும் விதமாக இந்த இல்யூஷன் படங்கள் அமைந்து இருப்பதால், இந்த ஒளியியல் மாயை படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க நெட்டிசன்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மொத்தம் 5 நாய்கள் உள்ளன. ஐந்து நாய்களையும் சரியாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. படத்தை நன்கு உற்று பாருங்கள்.. வரிசையாக கார்கள் நிற்கின்றன.
சிவப்பு , மஞ்சள், கருப்பு, நீல வண்ணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இந்த கார்களில் சிலவற்றில் நாய்கள் இருக்கின்றன. மொத்தமாக ஐந்து கார்களில் நாய்கள் உள்ளன. படத்தை நன்றாக உற்று பாருங்கள்.. ஆங்காங்கே வண்ணத்துப்பூச்சிகளும் பறந்து கொண்டிருக்கின்றன. இந்த கலர்புல் வண்ணத்து பூச்சிகளுக்கு இடையே, நிற்கும் கார்களுக்குள் நாய்கள் நிற்கின்றன. ஆனால் எல்லா கார்களிலும் நாய்கள் இல்லை.
மொத்தமாக இங்கே 11 கார்கள் உள்ளன. இவற்றில் 5 கார்களில் மட்டுமே நாய்கள் இருக்கின்றன. உடனே விடையை கண்டுபிடித்து சொல்லுங்க.. படத்தை நன்கு உற்று பார்த்தால்தான் தெரியும்.. விடையை கண்டுபிடிக்க முடியாதவர்கள் கூடுதலாக 5 செகண்ட் எடுத்துக்கோங்க... இப்ப டிரை பண்ணி பாருங்க. உங்களில் பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்..
விடையை கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் உண்மையாகவே ஜீனியஸ்தான். எப்படி பார்த்தாலும் 5 விலங்குகள் எங்கே இருக்கு என கண்டுபிடிக்க முடியலயே என படத்தையே உற்று பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் விடை அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.













Click it and Unblock the Notifications