மான், ஒட்டகம் என "6 உயிரினங்கள்" பதுங்கியிருக்கு.. அதி புத்திசாலியா நீங்க? 8 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு, முயல், ஒட்டகம் என 6 உயிரினங்கள் மறைந்து உள்ளன. படத்தில் மறைந்திருக்கும் இந்த 6 உயிரினங்களையும் 8 செகண்டிற்குள் கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். மிகவும் எளிதான ஆப்டிகல் இல்யூஷன் படம் என்றாலும் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் குழம்பியுள்ளனர். எனவே உங்களால் முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள்.
ஒருவருடைய ஆளுமைத்திறன், கவனிப்புத் திறன், ஆளுமை, குணாதிசயங்களை பற்றி அறிந்துகொள்ள பலவிதமான சோதனைகள் உள்ளன. அப்படித்தான் ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்களை வைத்து ஒருவரின் குணாதிசியங்கள், ஆளுமை, கவனிப்புத்திறன், சிந்தனையாற்றலை கண்டுபிடித்து விடலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

மற்ற ஆய்வுகளை போல் கேள்வி பதில் மூலமாகவோ, எழுத்துத் தேர்வு மூலமாகவோ இல்லாமல் ஒரு படத்தினை வைத்து அவர்களது குணாதிசயங்களை கண்டுபிடிக்க முடியும். ஆப்டிகல் இல்யூஷன் படத்தை எப்படி பார்க்கிறார்? அதில் மறைந்துள்ளவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை வைத்து ஓரளவு கணித்துவிட முடியும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இதன் காரணமாகவே ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்களுக்கு இணையத்தில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷசன் படத்தில் மொத்தம் 6 உயிரினங்கள் மறைந்து இருக்கின்றன. அந்த 6 உயிரினங்களும் எங்கெங்கு மறைந்து இருக்கின்றன என்பதை 8 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.
என்ன போட்டிக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 8. ஓகே டைம் ஓவர். கொடுக்கப்பட்ட 8 செகண்ட டைமிற்குள் 6 உயிரினங்களையும் கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் கண்பார்வை செம ஷார்பாக இருக்கிறது. அதீத கவனிப்புத்திறன் பெற்றவர்களாக நீங்கள் இருப்பீர்கள். ஆனால் சில உயிரினங்கள் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது. 6 உயிரினங்களும் தெரியவில்லையே என்று சொல்கிறவர்கள் மீண்டும் ஒரு முறை படத்தை பார்க்கவும்.
படத்தில் மலைகள், மரங்கள், செடி, கொடி, பூக்கள் என உள்ளன. இதில் மலையை பார்த்தால் என்றால் அதில் ஒரு உயிரினம் வடிவத்தில் இருக்கும். செடி கொடி இலைகள் என எதை எடுத்தாலும் அதனை ஒரு உயிரினத்தோடு ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் இதற்கான விடைகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மிகவும் எளிதான ஆப்டிகல் இல்யூஷன் படம் என்றாலும் பலரும் இதில் உள்ள ட்ரிக்சை கண்டுபிடிக்க மறந்துவிடுகிறார்கள்.

இதனாலேயே விடைகளை கண்டுபிடிக்க தாமதம் ஆகின்றன. இப்போது முயற்சித்து பாருங்கள் எளிதில் விடைகளை கண்டுபிடித்து விடலாம். ஆம் படத்தில் மலையையும், அருகில் உள்ள இலைகளையும் சேர்த்து பார்த்தோம் என்றால் ஒட்டகமும், இடது புறத்தில் உள்ள மரத்தின் தண்டை பார்த்தால் முதலையும், ஒரு பூவை பார்த்தால் பட்டாம் பூச்சியும், ஒரு செடியை பார்த்தால் நல்ல பாம்பும், வலதுபுறம் மேலே இலையில் பார்த்தோம் என்றால் முயல்குட்டியும், படத்தின் வலதுபுறத்தில் உள்ள மரத்தையும் செடிகளையும் சேர்த்து பார்த்தால் மான் நிற்பதையும் காண முடியும்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications