ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்! படத்தில் ”கேரட்” எங்கே இருக்கிறது? 3 செகண்டில் சொல்லுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்கறிகள் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டு உள்ளன. நம் கண்களுக்கு பல காய்கறிகள் இருப்பது தெரிந்தாலும், கேரட் மட்டும் உங்கள் கண்களுக்கு பார்த்தவுடன் தெரியாதவாறு மறைத்து வைக்கப்பட்டுள்ளது. மறைந்திருக்கும் இந்த கேரட் எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 3 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்க தான் ஜீனியஸ்.

கண்களை ஏமாற்றும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தினமும் இணையத்தில் புதிது புதிதாக பரவி வருகின்றன. பார்த்ததும் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாது. அப்படித்தான் இந்த படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இதனாலேயே இதில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

optical illusion offbeat trend

சிலர் இந்த படங்களை பார்த்த அடுத்த சில வினாடிகளிலேயே விடையை கண்டுபிடித்துவிடுவார்கள். தொடர்ச்சியாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து வருபவர்களுக்கு இதில் விடையை கண்டுபிடிப்பது என்பது எளிது. இல்லையெனில் மூளையை கசக்கி பிழிந்தால் தான் விடையை கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில் தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்க இருக்கிறோம்.

இந்த படத்தில் முதலில் நாம் பார்க்கும் போது காய்கறிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு, தக்காளி, சௌ சௌ காய், பீட்ரூட் என பல காய்கறிகள் தனித்தனியாக பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது. இது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், இந்த படத்தில் கேரட் உங்க கண்களுக்கு தெரிந்ததா?.. கேரட் இங்கே இல்லவே இல்லை.. அப்படித்தானே..

ஆனால் இந்த படத்தில் கேரட்டும் உள்ளது. இந்த கேரட் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பது தான் இன்றைய சவால் ஆகும். அதுவும் 3 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா.. ரொம்பவும் ஈசி என்று நினைத்துவிடாமல், விரைந்து தேடிப்பாருங்கள். குறிப்பிட்ட 3 செகண்டுக்குள் விடையை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான். என்ன போட்டிக்கு தயாரா..

1. 2.. 3. ஓகே டைம் ஓவர்.. என்ன கண்டுபிடிக்க முடிந்ததா. 3 செகண்டுக்குள் கேரட் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க ஜீனியஸ் தான். ஆனால் விடையை இப்படி 3 செகண்டுக்குள் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்று நினைப்பவர்கள், கூடுதலாக இன்னும் ஒரு 5 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு தேடிப்பாருங்கள். 8 செகண்டுக்குள் கண்டுபிடித்து இருந்தாலும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

ஆனால் எவ்வளவு தேடியும் கேரட் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு நாங்கள் ஒரு டிப்ஸ் தருகிறோம். அதனை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உருளைக்கிழங்கு இருக்கும் பெட்டியை மட்டும் பாருங்கள். அங்கு தான் கேரட் இருக்கிறது. உங்கள் கண்களை உருட்டி உருட்டி பாருங்கள்.

அட ஆமா.. இங்கே தான் கேரட் இருக்கிறது.. என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இப்போது 100க்கு 99 சதவீதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இப்போதும் விடை எங்கு இருக்கிறது என்று தெரியாதவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+