ஆந்தை கூட்டங்களுக்கு மத்தியில்! ஒளிந்திருக்கும் ”பூனை” எங்கே இருக்கு? 8 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆந்தைக் கூட்டங்கள் மொத்தமாக உள்ளன. பார்ப்பதற்கு அனைத்தும் ஆந்தைகள் என்று தான் நம் கண்கள் சொல்லும். ஆனால் கொஞ்சம் உற்று பார்த்தால் இங்கே ஒரு "பூனை" இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியும். நம் கண்களுக்கு அகப்படாதவாறு மறைந்திருக்கும் இந்த பூனையை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் இணையத்தில் பரவி வருகின்றன. பார்த்த உடன் நம் கண்களால் கண்டுபிடிக்க முடியாதவாறு இந்த படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். சின்ன சின்ன ட்ரிக்ஸ்களை வைத்து இந்த படத்தில் மறைந்திருப்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

மூளையை கசக்கி பிழியச் செய்யும் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், ஒருவரது கவனிப்புத் திறன் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. ஏனென்றால் ஒருவர் இந்த படத்தினை எவ்வாறு அணுகுகிறார், என்னென்ன அப்சர்வேஷன் செய்கிறார் என்பதை வைத்து இதனை சொல்கின்றனர்.
அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தை பார்த்த 100 க்கு 90 பேரால் 8 செகண்டுக்குள் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே உங்களால் விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என்று முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது.
டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. .. 8. ஓக்கே டைம் ஓவர். என்ன பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடிந்ததா?.. ரொம்ப எளிதான படம் போல் தெரிந்தாலும் விடையை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று தோன்றுகிறதா?.. ஆம்.. அது தான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் மேஜிக். ஆனால் எப்படியும் இப்போது குறிப்பிட்ட 8 செகண்டுக்குள் பூனை இருக்கும் இடத்தை அதிகம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள்..
உங்களுக்கு பாராட்டுக்கள். உண்மையாகவே நீங்க கிங் தான். உங்கள் கவனிப்புத்திறன் மற்றும் சிந்தனைத் திறன் அபாரமாக உள்ளது. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள் வருத்தப்பட வேண்டும். மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். படத்தில் எல்லா ஆந்தைகளும் ஒரே போல் தெரிந்தாலும், பூனைக்கும் ஆந்தைக்கும் என்ன வேறுபாடு உள்ளது என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்.
அதை தெரிந்தாலே கண்டுபிடித்து விடலாம். கொஞ்சம் உற்று பார்த்தீர்கள் என்றால் எல்லா ஆந்தைகளுக்கும் பறவை என்பதால் வாய் வளைந்து இருக்கும். ஆனால் பூனைக்கு அப்படி இருக்காது. எனவே அந்த கோணத்தில் தேடிப்பாருங்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இப்போது சிலர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுக்கள்.
ஆனால் இப்போதும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களுக்கு ஒரு "க்ளூ" கொடுக்கிறோம். அதாவது படத்தின் வலது புறம் அடிப்பகுதியில் மட்டும் உற்று பாருங்கள். பூனை இருக்கும் இடம் தெரிந்துவிடும். அட ஆமா.. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என்று நீங்கள் சொல்வது புரிகிறது.. எனினும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பூனை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. கண்டுபிடிக்க முடியாதவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.













Click it and Unblock the Notifications