படத்தில் விவசாயியின் மனைவி எங்கே இருக்கிறார்? 99% பேரால் கண்டுபிடிக்க முடியல.. உங்களால் முடியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விவசாயியின் மனைவி எங்கே இருக்கிறார்? என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 6 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். 99 சதவீதம் பேரால் சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே உங்களால் முடிகிறதா? என்று முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் மூளைக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்க இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்ப்பதற்கு பதிலாக இது போன்ற இல்யூஷன் படங்களுக்கு விடையளிக்க நெட்டிசன்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் உள்ள சின்ன ட்ரிக்ஸ் மூளையை குழப்பி விடும்.

optical illusion offbeat trend

ஒருமுறை மேலோட்டமாக பார்த்தால் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாது. இதன் விடையானது சற்று உற்று பார்த்தாலோ, கூர்ந்து பார்த்தாலோ தான் கண்டுபிடிக்க முடியும். இப்படி விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்வதன் காரணமாக ஒருவரது அறிவுத்திறன் மேம்படுகிறது என்றும் ஆய்வு சொல்கிறது. இதேபோல் ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கு ஒருவர் விடையளிப்பதை வைத்து அவரது ஐகியூ திறனையும் சொல்லிவிட முடியுமாம்.

சரி விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டிற்கு முன் விவசாயி ஒருவர் நிற்பது போல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த முதியவர் யாரையோ தேடிக்கொண்டிருப்பது போல தெரிகிறது. ஆம்.. அவரது மனைவியை காணவில்லையாம். அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார். அந்த முதியவரின் மனைவி எங்கே இருக்கிறார்? என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.

முதியவரின் மனைவி எங்கே இருக்கிறார் என்று 6 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4.. 5.. 6. ஓக்கே டைம் முடிந்தது. படத்திற்கான விடையை 6 செகண்டுக்குள் கண்டுபிடித்து இருந்தால் நீங்க அதிபுத்திசாலி தான்.. 99 சதவீதம் பேர் மட்டுமே விடையை சரியாக சொல்லியிருப்பதாக இதில் கூறப்பட்டிருக்கும் நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

ஆனால் விடையை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பவர்கள் மீண்டும் சிறிது டைம் எடுத்துக்கொண்டு விடையை தேடிப்பாருங்கள். எளிதில் கண்டுபிடித்து விடலாம். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லையா?.. கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது படத்தில் உள்ள முதியவரின் இடது கால் அருகே வலப்பக்கம் மட்டும் பாருங்கள்.. விடையை கண்டுபிடித்துவிடலாம்.

அட.. ஆமா! நீங்கள் சொல்வது சரிதான்.. நாங்களும் விடையை கண்டுபிடித்துவிட்டோம் என்று நீங்கள் சொல்வது புரிகிறது. இப்போது கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து விட்டீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்காதவர்கள் படத்தை தலைகீழாக திருப்பி பார்த்தால் விடை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடலாம். இப்போது 99 சதவீதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள். மீதமுள்ள ஒரு சதவீதம் பேருக்காக, இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+