சிங்கத்துக்கே தண்ணி காட்டும் "2 எலிகள்" எங்கே இருக்கு? 10 செகண்ட்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கத்துக்கே 2 எலிகள் தண்னி காட்டும் வகையில் ஒளிந்து இருக்கின்றன. சிங்கம் கிட்டயே செல்ல அச்சப்படும் விலங்குகளுக்கு மத்தியில் "கொஞ்சம் இருங்க பாய்" என்று சொல்லும் தொனியில் 2 எலிகளும் பக்கத்திலேயே உள்ளன. அந்த 2 எலிகளும் எங்கே இருக்கின்றன? என்று 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும்.

ஒருவரது புத்திக்கூர்மையை பலப்படுத்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கவனிப்புத்திறன், ஆராய்தல், ஆளுமைத்திறன் வரை ஒருவரது நுண்ணாற்றலை கண்டுபிடிக்க இத்தகைய இல்யூஷன் படங்கள் உதவுவதாக சொல்லப்படுகிறது.

optical illusion offbeat trend

ஏனென்றால் நாம் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களை முதலில் பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும் சற்று கூர்ந்து பார்த்தால் வேறு ஒரு வித தோற்றத்தையும் காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதே காரணம். அதாவது ஒருவர் எந்த விதத்தில் அந்த படத்தை அணுகுகிறார் என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது. அவர் அந்த படத்தை பார்க்கும் விதம், படத்தை பார்த்து புரிந்துகொள்ளும் திறன் உள்ளிட்டவற்றை வைத்து மதிப்பிட முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில், காட்டுக்கே ராஜாவான சிங்கத்தின் பிடரியிலேயே இரண்டு எலிகள் அட்ராசிட்டி செய்து வருகின்றன. அந்த 2 எலிகள் எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதாவது காட்டுக்கே நீங்க ராஜா என்றாலும்... மற்ற விலங்குகள் சிங்கத்தை பார்த்து அச்சமடைந்தாலும்.. கொஞ்சம் இருங்க பாய் மொமெண்டில் இரண்டு எலிகள் எந்த வித அச்சமும் இன்று அருகில் அமர்ந்துள்ளன.

அந்த சுட்டி எலிகள் இருக்கும் இடம் உங்க கண்களுக்கு தெரிகிறதா?.. படத்தை பார்த்ததும் தெரியவில்லை தானே.. அது தான் ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் கண்கட்டி வித்தை படங்கள். சரி உங்களுக்கு இந்த எலிகளை கண்டுபிடிக்க 10 செகண்ட் டைம் கொடுக்கிறோம். அதற்குள் கண்டுபிடித்து சொல்லுங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1..2 .. 3.. 3.. ..10. ஓகே டைம் ஓவர்.

என்ன எலிகள் இருக்கும் இடம் தெரிந்ததா? கொடுக்கப்பட்ட டைமுக்குள் எலிகள் இருக்கும் இடம் தெரிந்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்க கில்லி தான். ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை உற்று பாருங்கள். காட்டில் சிங்கம் ஒன்று இருக்கிறது. அவ்வளவு தான் படத்தில் உள்ளது. ஆனால் உற்று பார்த்தால் எலி இருப்பது கண்களுக்கு தெரியும்.

அதாவது சிங்கத்தின் வாய்ப்பகுதியில் மட்டும் கவனித்தால் அது ஒரு எலியின் வடிவமாக தெரியும். அட நீங்க சொல்வது உண்மை தான்.. ஒரு எலியை கண்டுபிடித்துவிட்டோம்.. இன்னொரு எலி எங்கே இருக்கிறது என்று கேட்பது புரிகிறது. சிங்கத்தின் கால்களை மட்டும் தனித்தனியாக ஸ்கேன் செய்து பாருங்கள் அதில் தான் மற்றொரு எலி இருக்கிறது. விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எலிகள் இரண்டும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+