மியாவ்.. மியாவ்.. "பூனைக்குட்டி" எங்கே இருக்கிறது? 8 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிச்சு சொல்லுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனை ஒன்று ஒளிந்திருக்கிறது. ஒளிந்திருக்கும் பூனை படத்தில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். 8 செகண்ட் டைமிற்குள் நீங்கள் இந்த பூனையை கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?..

ஆப்டிகல் இல்யூஷன் எனும் ஒளியியல் மாயை படங்கள் சவால் மிக்கவை. இந்த இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் விடையை கண்டுபிடிப்பதற்குள் மூளையை கசக்கி பிழிய வைத்துவிடும். ஒருவரின் அறிவுத்திறன், சிந்தனை ஆற்றல் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் இந்த புதிர் படங்கள் இருப்பதால், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

optical illusion offbeat trend

இத்தகைய இல்யூஷன் படங்களில் விடையானது நேரடியாக நம் கண்களுக்கு தெரியும்படி இருக்காது. மிகவும் நுணுக்கமாக ஆழ்ந்து கவனித்தால் தான் விடையை கண்டுபிடிக்க முடியும். படத்தை நாம் பார்க்கும் கோணம் உள்ளிட்டவை அடிப்படையில் தான் இந்த இல்யூஷன் படத்திற்கான விடையை கண்டுபிடிக்க முடியும்.

சவால் மிக்க இந்த இல்யூஷன் படங்கள் ஜாலியான விளையாட்டாகவும் இருப்பதால் ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்கள் பயனுள்ள வகையில் நேரத்தை கழிக்கும் விதமாக இத்தகைய இல்யூஷன் படங்களை விரும்பி பகிர்கிறார்கள்.. விடையை கண்டுபிடித்து விட்டு தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் ஷேர் செய்து அவர்களின் அறிவுத்திறனையும் சோதித்து பார்க்கும் விதமாக ஜாலியாக அவர்களுக்கு சவால் விடுக்கிறார்கள்.

சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனை ஒன்று ஒளிந்திருக்கிறது. அந்த பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1..2 .. 3.. 4.. .. 8. ஒகே டைம் ஓவர். படத்தில் பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?

குறிப்பிட்ட 8 செகண்டிற்குள் கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க கிரேட் தான். ஆனால் எங்கு தேடியும் எங்க கண்களுக்கு பூனை அகப்படவில்லையே என்று நினைப்பவர்கள், மீண்டும் ஒருமுறை படத்தை நுணுக்கமாக பாருங்கள். எளிதில் பூனை இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம். இப்போது பூனையை கண்டுபிடித்து இருந்தால் நீங்க கிரேட் தான்.

optical illusion offbeat trend

ஆனால் இப்போது வரை பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு, இங்கே ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது வழக்கம் போல் படத்தின் வலது புறத்தின் மையப்பகுதியில் மட்டும் போக்கசுடன் பாருங்கள். அட ஆமா. பூனை இங்கே தான் இருக்கிறதா என்று புரியும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் பூனை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+