ஆடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் "நாய்க்குட்டி" எங்கே இருக்கு? 7 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிறைய ஆடுகள் இருக்கின்றன. இந்த ஆடுகளுக்கு மத்தியில் ஒரே ஒரு நாய்க்குட்டி உள்ளது. இந்த நாய்க்குட்டி எங்கே இருக்கு என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா? நாய்க்குட்டி எங்கே என்று கண்டுபிடிங்க பார்க்கலாம்.
ஒளியியல் மாயை என சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூசன் படங்கள் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும். ஓய்வு நேரத்தில் கூட நம்மை புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்க இத்தகையை படங்கள் உதவி செய்கின்றன. ஒருவரது கவனிப்புத்திறன், சிந்தனைத்திறனை மேம்படுத்த இந்த படங்கள் உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

பொதுவாக ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது அதன் விடை நேரடியாக நம் கண்களுக்கு தெரியாது. நம் கண்களை ஏமாற்றும் வகையில் விடையானது மறைந்து இருக்கும். அப்படித்தான் இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்திலும் விடையானது நம் கண்களுக்கு தெரியாத வகையில் மறைந்து உள்ளது. அதனை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஆடுகள் கூட்டம் கூட்டமக நின்று மேய்ந்துகொண்டிருக்கின்றன. வெள்ளை நிற ஆடுகளும், இடைஇடையே கருப்பு நிற ஆடுகளும் நின்று மேய்ந்துக்கொண்டிருக்கின்றன. இது தவிர மரங்கள் இருப்பது போல் படத்தில் தெரிகிறது. நாம் முதலில் பார்க்கும் போது இவை மட்டும் தான் நன் கண்களுக்கு தெரிகிறது.. அப்படித்தானே...
ஆனால் நன்கு உற்று பார்த்தோம் என்றால், இங்கே ஒரு நாய்க்குட்டி இருப்பது தெரியும். இந்த நாய்க்குட்டி இந்த படத்தில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பது தான் உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். உங்களுக்கு 7 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் நாய்க்குட்டி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து நீங்க ஜீனியஸ் என்று நிரூபித்து விடுங்கள்.
சரி போட்டிக்கு தயாரா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 7. ஓக்கே டைம் ஓவர். படத்தில் மறைந்துள்ள நாய்க்குட்டி இருக்கும் இடத்தை 7 செகண்டுக்குள் கண்டுபிடித்தவர்களு பாராட்டுக்கள். நீங்க உண்மையிலேயே ஜீனியஸ் தான். ஆனால் நாய்க்குட்டி இருக்கும் இடம் தெரியாமல் திணறிக்கொண்டிருப்பவர்கள் ஒன்றும் கவலை அடைய வேண்டாம். இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து மீண்டும் முயற்சித்து பாருங்கள்.
அப்படியும் கண்டுபிடிக்க சிரமமாக இருக்கிறதே என்று சொல்கிறவர்களுக்காக நாங்கள் ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது நாய்க்குட்டி கருப்பு நிறத்தில் தான் உள்ளது. எனவே படத்தில் உள்ள சில கருப்பு ஆடுகளை மட்டும் உற்று நோக்கி பாருங்கள்.. ஈசியாக விடையை கண்டுபிடித்துவிடலாம். இப்போது 99 சதவீதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். மீதமுள்ள ஒரு சதவீதம் பேருக்காக இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நாய்க்குட்டி வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.













Click it and Unblock the Notifications