ஐக்யூ டெஸ்ட்: படத்தில் மறைந்திருக்கும் "நாய்" எங்கே இருக்கு? 3 செகண்டுக்குள் கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் ஆப்டிகல் இல்யூசன் படத்தில் நாய் ஒன்று மறைந்துள்ளது. படத்தில் மறைந்திருக்கும் இந்த நாய் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 3 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் உருவாக்கப்படிருக்கும் படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆகும். இந்த படங்களை கண்கட்டி வித்தை படங்கள் என்றும் சொல்லலாம். பார்க்கும் கோணங்களை மாற்றி பார்க்கும் போது அதில் மறைந்துள்ள மற்ற விஷயங்கள் தெரியும். பார்த்ததும் விடைகள் நம் கண்களுக்கு தெரியாதவாறு தான் இந்த படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.

optical illusion offbeat trend

அப்படி நாம் பார்த்ததும் விடை கண்களுக்கு தெரியாதவாறு இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூசன் படத்தில் ஒரு வியாபாரி, சோப்புகள் அடங்கிய பெட்டியை தள்ளு வண்டியில் வைத்து எடுத்து செல்கிறார். வியாபாரத்திற்கு புறப்பட்ட அந்த வியாபாரி, வழி நெடுக அழகான பகுதிகளை கொண்ட சாலையில் சென்று கொண்டு இருக்கிறார்.

பயணக்களைப்பே கொடுக்காத சாலையில் சென்று கொண்டு இருக்கும் வியாபாரியை, நாய் ஒன்றும் பின் தொடர்ந்து வருகிறது. அந்த நாய் படத்தில் எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. வெறும் 3 செகண்ட் தான் டைம்.. இந்த இல்யூஷன் படத்தில் விடையை கண்டுபிடிப்பது ரொம்பவே ஈசியானது. ஏனெனில், எளிதில் அனைவரும் கண்டுபிடிக்கும் விதமாகவே இந்த படமானது உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 3 செகண்டுக்குள் இந்த படத்திற்கான விடையை உங்களில் பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க முடியவில்லையே என நினைப்பவர்கள் மீண்டும் ஒரு முறை உற்று பார்த்தால் விடை தெரிந்துவிடும். அட ஆமா..! இவ்வளவு எளிதாக இருக்கிறதே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஆனால் எவ்வளவு நேரம் தேடினாலும் நாய் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லையே என்று ஒரு 10 சதவீதம் பேர் இருப்பார்கள். அவர்கள் விடையை கண்டுபிடிப்பதற்காக ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. படத்தின் இடது புறத்தின் அடிப்பகுதியில் மட்டும் உற்று கவனித்து பாருங்கள். வியாபாயின் பின்புறம் பாருங்கள். செடிகள் எல்லாம் சேர்ந்து ஒரு நாய் உருவத்தை காண்பிக்கிறதா.. ஆம் இது தான் படத்திற்கான விடை. அப்படியும் தெரியவில்லையே என்பவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+