படத்தில் ”நாய்” எங்கே இருக்கு? 6 செகண்ட் டைம்.. கழுகுப்பார்வை கொண்டவரால் தான் கண்டுபிடிக்க முடியும்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் நாய் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 6 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். கழுகுப்பார்வை கொண்டவர்களால் தான் இந்த படத்தில் உள்ள நாயை கண்டுபிடிக்க முடியும் என்று சவால் விடுக்கப்படுகிறது. எனவே உங்களால் முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.
நாம் பார்க்கும் ஒரு படமானது நம் கண்களுக்கு ஒரு மாதிரியாகவும், வேறு ஒருவர் பார்க்கும் போது அவரது கண்ணுக்கு வேறு மாதிரியாகவும் தோன்றும் படமே ஆப்டிகல் இல்யூஷன் படங்களாகும். பார்க்கும் கோணங்களை மாற்றி பார்க்கும் போது படத்தில் உள்ள தன்மையும் மாறும். இப்படித்தான் இந்த படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இதேபோன்று கானல் நீர் என்று சொல்வது போல ஆப்டிகல் இல்யூஷன் படத்தையும் சொல்லலாம்.

இதனால் இந்த படத்தை கண்கட்டி வித்தை படங்கள் என்றும் சொல்வதுண்டு. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே இன்றைய சவால் ஆகும். கழுகுப்பார்வை கொண்டவரால் தான் இந்த படத்தில் இருக்கும் நாயை குறிப்பிட்ட 6 செகண்டில் கண்டுபிடிக்க முடியும் என்று சவால் விடப்பட்டுள்ளது. எனவே உங்களால் முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.
என்ன போட்டிக்கு தயாராக இருக்கிறீர்களா.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 6. ஓகே. டைம் ஓவர். என்ன படத்தில் இருக்கும் நாயை கண்டுபிடித்துவிட்டீர்களா? குறிப்பிட்ட 6 செகண்டுக்குள் கண்டுபிடித்திருந்தால் நீங்க அதிபுத்திசாலி தான். ஆனால் இன்னும் நாய் இருக்கும் இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருப்பவர்கள் படத்தை மீண்டும் நன்கு உற்று கவனியுங்கள்.
படத்தில் என்னென்ன உள்ளன? என்று ஒரு நொடி பாருங்கள். மரத்தடியில் உள்ள வீட்டின் முன்பு மாணவ மாணவிகள் தனித்தனியாக இருந்து படித்து கொண்டிருக்கின்றனர். மரத்தின் மேல் புறாக்கள் பறந்து சென்று கொண்டிருப்பது போலவும், மரத்தின் தண்டில் எதேதோ விலங்குகள் தெரியும் படியுமான தோற்றமும் தெரிகிறது. அதேபோன்று தூரத்தில் வீடு ஒன்றும் உள்ளது. இவை தான் தெரிகின்றன.. அப்படித்தானே..
ஆம்.. ஆனால் இதில் இன்னும் ஒன்றை கவனித்தால் உங்களுக்கு விடை எங்கே இருக்கிறது என்று தெரிந்துவிடும். எல்லாரும் மரத்தின் தண்டு பகுதியில் தான் விடை இருக்கிறது என்று தேடிக்கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் கண்டுபிடிக்க முடியாது. அதை தவிர்த்து மற்ற இடங்களில் தேடிப்பாருங்கள். எளிதில் நாய் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடலாம்.
ஆம் படத்தின் தூரத்தில் ஒரு வீடு உள்ளது அல்லவா.. அங்கு மட்டும் கூடுதல் போக்கசுடன் பாருங்கள். அந்த வீட்டு வாசலில் தான் நாய் நின்று கொண்டிருக்கிறது. இப்போது 100க்கு 90 சதவீதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் அப்படியும் தெரியவில்லையே என்பவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நாய் இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.













Click it and Unblock the Notifications