ஜீனியசால் மட்டுமே முடியும்.. படத்தில் ”வஞ்சிரம் மீன்” எங்கே இருக்கு?.. 8 செகண்ட் டைம்! கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வஞ்சிரம் மீன் எங்கே இருக்குது? என்று கண்டுபிடிக்க வேண்டும். ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்கிற வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு 8 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. இதுவே உங்களுக்கான சவால் ஆகும். அதற்குள் உங்களால் மீன் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் மனதுக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சியை தருகின்றது. ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன. இது போன்ற இல்யூஷன் படங்களால் ஒருவரது கவனிப்பு திறன் மேம்படுகிறது. ஒருவரது கவனிப்புத்திறன் எந்த வகையில் இருக்கிறது என்பதை இதுபோன்ற படங்களை வைத்து சொல்லிவிட முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைக்கப்பட்டிருக்கும் விடையை கண்டுபிடித்து பதில் அளிப்பதன் மூலம் அவர்களது கவனிப்பு திறனானது அளவிடப்படுகிறது. இதனாலேயே இதுபோன்ற இல்யூஷன் படங்களை பார்ப்பதன் மூலமாக அவர்களது கவனிப்புத்திறனும் மேம்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அந்த வகையிலே பலருக்கும் சவால் அளிக்கும் வகையில் ஒரு இல்யூஷன் படமானது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்த இல்யூஷன் படமானது பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மரங்கள், செடிகள், கொடிகள், சிறு ஓடையில் தண்ணீர் ஓடுவது போல் படத்தில் பார்க்கும் போது தெரிகிறது. இடையிடையே பாறைகளும் தெரிகின்றன. இதற்கு மத்தியில் தான் ஒரு "வஞ்சிரம் மீன்" ஒன்றும் உள்ளது. அந்த மீன் எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 8. ஓகே டைம் ஓவர். படத்தில் மீன் இருக்கும் இடம் தெரிந்ததா? குறிப்பிட்ட 8 செகண்டுக்குள் மீன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான். உங்க பார்வை பருந்து பார்வை தான். ஆனால் மீன் எங்கே இருக்கிறது என்று 8 செகண்டுக்குள் கண்டுபிடிக்கவில்லை என்றால், ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.
கூடுதலாக இன்னும் ஒரு 5 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு முயற்சித்து பாருங்கள். மீனானது ஓடையில் தான் இருக்கும் என்று தண்ணீரில் மட்டும் பார்க்க வேண்டாம். படம் முழுக்க எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே அந்த கோணத்தில் மீனை தேடிப்பாருங்கள். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இல்லை.. இல்லை.. இன்னும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறவர்களுக்கு நாங்கள் ஒரு க்ளூ தருகிறோம்.
அதாவது படத்தின் இடது புறம் டாப்பில் மட்டும் உற்று கவனியுங்கள். உங்கள் பார்வையானது பருந்து பார்வை போல இருக்க வேண்டும். இப்போது 100க்கு 95 சதவீதம் பேர் மீன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள். ஆனால் இன்னும் சிலர் கண்டுபிடித்து இருக்க மாட்டீர்கள். அவர்கள் படத்தின் இடப்புறம் உள்ள மரத்தின் ஒரு கிளையில் மட்டும் மீன் போன்ற வடிவமைப்புடன் ஒப்பிட்டு பாருங்கள் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

அட ஆமா.. நீங்கள் சொல்வது சரி தான். மீன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இருந்தாலும் உங்களுக்காக மீன் எங்கே இருக்கிறது? என்பதை இங்கே கீழே கொடுகப்பட்டுள்ள படத்திலும் வட்டமிட்டு காட்டியுள்ளோம். பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். வஞ்சிரம் மீன் தண்ணீரில் இல்லாமல் எப்படி மரத்தில் இருக்கும்? என்று எல்லாம் கற்பனை செய்ய வேண்டாம். இது ஒரு ஜாலியான டெஸ்ட் தான்.












Click it and Unblock the Notifications