படத்தில் "தவளை" எங்கே இருக்கு? 90 சதவீதம் பேரால் கண்டுபிடிக்க முடியல.. உங்களால் முடியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் மாயை படத்தில் காட்டுக்குள் தவளை ஒன்று இருக்கிறது. இந்த தவளை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். வெறும் 8 செகண்ட் டைமுக்குள் படத்தில் தவளை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டால் நீங்க ஜீனியஸ் தான். என்ன சவாலுக்கு ரெடியா?..

கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்லப்படும் ஆப்டிகல் மாயை படம் பார்ப்பவர்களின் கண்களை ஏமாற்றி முட்டாள் ஆக்கிவிடும். இருக்கும் உருவத்தை இல்லாதது போலவும், இல்லாதவற்றை இருப்பது போலவும் நம் கண்களுக்கு மாயாஜால வித்தைகளை அளிக்கும் படங்களாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றன.

optical illusion offbeat trend

ஆப்டிகல் இல்யூஷன் படத்தால் ஒருவரது புத்திக்கூர்மை, சிந்தனைத்திறன் மேம்படுத்த முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து ஒருவரது மனநிலை எப்படி என்று ஓரளவு சொல்லிவிட முடியுமாம். இதனால் தான் போட்டித்தேர்வுகளில் கூட தற்போது ஆப்டிகல் புதிர் படங்கள் கேட்கப்படுகின்றன. சரி அதெல்லாம் இருக்கட்டும். இங்கு விஷயத்திற்கு வருவோம்.

தற்போது இணையத்தில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் தவளை ஒன்று உள்ளது. ஆனால் அந்த தவளை, பார்த்த உடன் நம் கண்களுக்கு தெரியும் படி இல்லை. எனவே இந்த தவளை படத்தில் எங்கே உள்ளது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா?

படத்தில் தவளை எங்கே உள்ளது என்பதனை 100க்கு 90 பேர் மட்டுமே சரியாக சொல்லி இருக்கிறார்களாம். எனவே உங்களால் முடியுமா என்று பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4.. .. 8. ஓக்கே டைம் ஓவர்.. என்ன தவளை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டீர்கள்.. அட சூப்பர்.. உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்க உண்மையிலேயே கெத்து தான்..

ஆனால் இன்னும் தவளை எங்கே உள்ளது என்று தெரியாமல் தேடிக்கொண்டிருப்பவர்களா நீங்க.. விடையை கண்டுபிடிக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். இன்னும் கொஞ்சம் கூடுதலாக டைம் எடுத்துக்கொண்டு தேடிப்பாருங்கள். பூதக்கண்ணாடி போட்டு தேடினால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஏன் என்றால் விடையானது கொஞ்சம் உற்று பார்த்தால் தெரியும் படி தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

optical illusion offbeat trend

எனவே கூடுதல் போக்கசுடன் படத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடிப்பார்த்தால் கண்டுபிடித்து விடலாம். அட அப்படியும் தெரியவில்லையே என்பவர்கள் படத்தில் அடிப்பகுதியில் வலதுபுறம் மட்டும் பாருங்கள். அட ஆமா.. என நீங்க நினைப்பது புரிகிறது. பெரும்பாலானோர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். எனினும் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தவளை எங்கே உள்ளது என்பது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+