உங்க கண்பார்வைக்கு சவால்.. படத்தில் "சாவி" எங்கே இருக்கு? 5 செகண்ட் டைம்.. கண்டுபிடித்து சொல்லுங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சாவி (key) எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். 5 செகண்ட் நேரத்திற்குள் சாவி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்றைய சவால் ஆகும். உங்கள் கண்பார்வைக்கு சவால் கொடுக்கும் விதமாக இந்த படம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்து சாவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. அந்த வகையில் இன்று நம் கண்களை சோதித்து பார்க்கும் வகையில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் சாவி எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் எதாவது விலங்குகளோ அல்லது பொருட்களோ படத்தை பார்த்ததும் நம் கண்களுக்கு தெரியாதவாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கும். மறைத்து என்றால் ஒளித்து வைப்பது அல்ல, நம் கண்களுக்கு முதலில் அகப்படாதவாறு இத்தகைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். படத்தை பார்த்ததும் நம் கண்களுக்கு தெரியாது.
ஆனால் படத்திற்கான விடை எங்கே இருக்கிறது என்று விடையை கூறிய பிறகு பார்த்தால் நம் கண்களுக்கு தெரியும். இப்படி, இருக்கின்ற ஒரு பொருளை இல்லாதது போல் காட்டி நம் கண்களை நம்ப வைக்கும் ஒரு மாயாஜால படம் தான் ஆப்டிகல் இல்யூஷன் படம். இந்த படத்தில் அப்படித்தான் ஒரு சாவி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்த்ததும் நம் கண்களுக்கு இந்த சாவி தெரியாதவாறு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தை முதலில் பார்க்கும் போது அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டது மட்டுமே நம் கண்களுக்கு தெரிகிறது. இன்னும் உற்று பார்த்தால் ஒருசில அட்டைப் பெட்டிகள் பெரிதாகவும், ஒருசில பெட்டிகள் சிறியதாகவும் உள்ளன. மேலும் சில அட்டைப் பெட்டிகள் திறந்த நிலையிலும் இருக்கின்றன. ஆனால் படத்தில் சாவி எங்கே உள்ளது என்று அனைவருக்கும் தெரியாமல்தான் இருக்கிறது.
இந்த சாவி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். உங்களுக்கு 5 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. படத்திற்கான விடையை கண்டுபிடிங்க பார்க்கலாம். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4.. 5. ஓகே டைம் ஓவர். குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் கண்பார்வை செம சார்ப் ஆக உள்ளது.
ஆனால் சாவி இருக்கும் இடம் தெரியவில்லையே? என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது படத்தில் உள்ள ஒரு மூடிய அட்டைப் பெட்டியின் மேல் தான் சாவி உள்ளது. அதுவும் வலது புறத்தில் மட்டும் பார்த்தால் போதும். வலதுபுறத்தில் மத்தியில் உள்ள அட்டைப் பெட்டி மீது உற்று கவனித்து பாருங்கள். சாவி இருக்கும் இடம் தெரிந்துவிடும். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று சொல்கிறவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications