படத்தில் "சிங்கம்" எங்கே இருக்கு? ஆயிரத்தில் ஒருவரே கண்டுபிடித்து இருக்கிறார்கள்! உங்களால் முடியுமா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கம் ஒன்று உள்ளது. மான்களை வேட்டையாட காட்டுக்குள் காத்திருக்கும் அந்த சிங்கம் எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடித்து சொல்ல வேண்டும். அதுவும் 7 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடித்து சொல்லிவிட்டால் நீங்க ஜீனியஸ் தான். படத்திற்கான விடையை ஆயிரம் பேரில் ஒருவரே கண்டுபிடித்துள்ளனர்.
ஆப்டிகல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் சவால் மிக்கவை. சாதாரண கண்களுக்கு விடை தெரியாது. சற்று உற்று கவனித்தால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும் என்ற வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கும். சாலையில் தூரத்தில் தண்ணீர் இருப்பது போன்று தோன்றும் ஆனால் அருகில் சென்று பார்த்தால் தண்ணீர் இருக்காது.

அது போலத் தான் ஆப்டிகல் இல்யூஷன் படமும் உருவாக்கப்பட்டிருக்கும். நாம் மேலோட்டமாக பார்க்கும் போது அதில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிக்க முடியாது. உற்று கவனித்தாலோ அல்லது பார்க்கும் கோணத்தை மாற்றி பார்த்தாலோ தான் விடையை கண்டுபிடிக்க முடியும். இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் விடையை கண்டுபிடிப்பதை வைத்து ஒருவரது குணாதிசியங்களையும் கண்டுபிடிக்க முடியும்.
ஒருவரது கவனிப்பு திறன், குணாதிசயங்கள், புத்திக்கூர்மை உள்ளிட்டவற்றையும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து கண்டுபிடித்திட முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் காடு ஒன்றில் விலங்குகள் உலாவுவது போல கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் சிங்கம் ஒன்று மறைந்து இருக்கிறது.
காட்டின் ராஜாவான அந்த சிங்கம் எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.... 7. ஓகே டைம் ஓவர். சிங்கம் எங்கே இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்தவர்கள் ஜீனியஸ் தான். ஆயிரம் பேரில் ஒருவரால் தான் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
எனவே குறிப்பிட்ட 7 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் தான். ஆனால் சிங்கம் இருக்கும் இடம் தெரியவில்லை என்றால் மீண்டும் ஒரு நிமிடம் படத்தை உற்று கவனியுங்கள். மான்கள் ஆங்காங்கே இருக்கின்றன. இதில் மத்தியில் உள்ள இரண்டு மான்களுக்கு இடையே தான் சிங்கம் இருக்கிறது.
இப்போது முயற்சித்து பாருங்கள். சிங்கம் இருக்கும் இடம் தெரிந்துவிடும். பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இப்போதும் சிங்கம் இருக்கும் இடம் தெரியவில்லை என்றால் படத்தில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.













Click it and Unblock the Notifications