லட்சத்தில் ஒருவராலேயே முடியும்.. படத்தில் முயல் எங்கே இருக்குன்னு சொல்லுங்க.. 3 செகண்ட்தான் டைம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முயல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 3 செகண்டுக்குள் முயல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். லட்சத்தில் ஒருவர் தான் குறிப்பிட்ட செகண்டுக்குள் விடையை சொல்லியிருக்கிறார்கள். எனவே உங்களால் முடிகின்றதா என்று முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தினமும் புதிது புதிதாக பரவி வருகின்றன. நாம் பார்க்கும் விடை கண்ணுக்கு தெரியாதவாறு இத்தகைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இதனால் படத்தை பார்த்ததும் இதற்கான விடையை நம்மால் கண்டுபிடித்து சொல்லிவிட முடியாது. ஆனால் சின்ன டிரிக்ஸ்களோடு தேடிப் பார்த்தால் உடனே விடையை சொல்லிவிடலாம்.

optical illusion offbeat trend

அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் அதிகம் பேரால் டிரெண்ட் ஆகி வருகிறது. பலரும் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். சொல்லப்போனால் இந்த படத்தின் விடையை கண்டுபிடிப்பது என்பது மிகவும் எளிதான விஷயம் தான் ஆனால் குறிப்பிட்ட செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இங்கு டாஸ்க்.

கடின உழைப்பை விட இப்போது ஸ்மார்ட் ஒர்க்கை தான் பலரும் விரும்புவார்கள். அதற்கு ஏற்றார் போலவே நீங்கள் ஸ்மார்ட் ஒர்க்கரா என்று கண்டுபிடிக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் போட்டித்தேர்வுகளில் கூட இப்போது டைமுக்குள் உங்களால் விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என சோதிக்கப்படுகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முயல் ஒன்று மறைந்துள்ளது. இந்த முயல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.

அதற்காக மணிக்கணக்கில் டைம் எடுத்துக் கொள்ள கூடாது வெறும் 3 செகண்ட் தான் டைம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் முயல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து லட்சத்தில் ஒருவர் என்று பெயர் எடுங்கள். உங்களுக்கான டைம் தொடங்கியது. 1.. 2.. 3. ஓக்கே டைம் ஓவர். 3 செகண்டுக்குள் படத்தில் முயல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் நீங்கள் ரொம்ப ரொம்ப ஸ்மார்ட் தான். லட்சத்தில் ஒருவர்.. உங்கள் ஐகியூ அபாரமாக இருக்கிறது.

கருப்பு வெள்ளை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பனிப்பாதையில் சிறுவர் சிறுமி இருவரும் ஸ்கேட்டிங் செய்வது போல் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் மரங்கள் இருக்கின்றன. செடிகள் இருப்பது போல் தெரிகிறது. ஆனால் முயல் இருப்பது போல் தெரியவில்லையே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். படத்தில் நிச்சயம் முயல் இருக்கிறது. நாங்கள் விடையை சொன்னபிறகு அட ஆமா.. என்று சொல்லக்கூடாது..

எனவே நன்கு தேடிப்பாருங்கள்.. உங்களால் கண்டுபிடிக்க முடியும்.. 3 செகண்டில் முடியவில்லை என்பவர்கள் கூடுதலாக இன்னும் ஒரு 10 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு படத்தின் மூளை முடுக்கெல்லாம் தேடிப்பாருங்கள். இப்போது ஒருசிலர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அவர்களுக்கும் பாராட்டுக்கள். ஆனால் இன்னும் விடை எங்கு இருக்கிறது என்று விழித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம்.

optical illusion offbeat trend

படத்தின் மையப்பகுதியில் தான், அதாவது செண்டரில் தான் முயல் இருக்கிறது. பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தால் எளிதில் விடை கிடைத்துவிடும். இந்த இரண்டு டிப்ஸ்களையும் வைத்து தேடுங்கள். நிச்சயம் உங்கள் கண்களுக்கு முயல் தெரிந்துவிடும். அட.. ஆமா.. நீங்கள் சொல்வது சரிதான் என்று நினைப்பது புரிகிறது. இருப்பினும் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதை பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+