பூனைக்கு டிமிக்கி கொடுக்கும் "எலி.." எங்கே இருக்கு.. 5 வினாடி தான் டைம்.. கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனை, மீன்களுக்கு மத்தியில் "எலி" ஒன்று மறைந்திருக்கிறது. இந்த எலி எங்கே இருக்கிறது என்று பூனை தேடி வருகிறது. பூனை கண்ணில் படாதவாறு ஒளிந்திருக்கும் இந்த எலி எங்கே இருக்கிறது என்று 5 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும். என்ன சவாலுக்கு ரெடியா?.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. பார்க்கும் நம் கண்களையே ஏமாற்றும் வகையில் இருக்கின்றது. இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

படத்தில் மறைந்து இருக்கும் விடைகள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதனால் பலரும் இந்த படங்களை பார்த்து குழம்பி விடுவார்கள். எனினும் சற்று கூர்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். அப்படி கண்டுபிடிப்பவர்கள் இந்த படங்களை தங்களது நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பி அவர்களால் முடிகிறதா என்று சோதித்து பார்க்கின்றனர்.
இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது. இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சொல்லுங்கள். இன்று நாம் பார்க்க இருக்கும் படத்தில் எலி ஒன்று மறைந்துள்ளது. அந்த எலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 5 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
என்ன போட்டிக்கு ரெடியா?.. 1.. 2.. 3.. 4.. 5. ஒகே டைம் ஓவர். படத்தில் எலி இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்பவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க ஜீனியஸ் தான். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று சொல்பவர்கள் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். கண்டுபிடித்துவிடலாம்.
படத்தில் பூனை, மீன்கள் இருக்கின்றன. இதற்கு இடையில் தான் எலி ஒளிந்து இருக்கிறது. உருவத்தில் சிறியது என்பதால் பார்த்த உடனே கண்ணுக்கு புலப்படாது. எனவே படத்தில் வலது புறத்தில் அடிப்பகுதியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி பாருங்கள். கண்டிப்பாக எலி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடலாம். அப்படியும் தெரியவில்லை என்கிறவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம்.
படத்தின் வலதுபுறத்தில் அடியில் பாறைகள் இருப்பது போன்று தான் எலியும் இருக்கிறது. எனவே இதை மனதில் வைத்து தேடிப்பாருங்கள் கண்டுபிடித்துவிடலாம். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பார்கள் என்று நம்புகிறோம். அப்படியும் தெரியவில்லையே என்பவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications