பருந்துப் பார்வை கொண்டவரா நீங்க.. படத்தில் “சேவற்கோழி” எங்கே இருக்கு? 8 செகண்டில் கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் மாயை படத்தில் சேவற்கோழி ஒன்று மறைந்துள்ளது. மறைந்துள்ள இந்த சேவல் எங்கே இருக்கு என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். பருந்துப் பார்வை கொண்டவர்களால் மட்டுமே 8 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடியும். இந்த சவாலை ஏற்றுக்கொண்டு 8 செகண்டுக்குள் சேவற்கோழி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு இருக்கின்றன. பொழுது போக்கு மட்டும் இன்றி சிந்திக்கும் திறனை தூண்டுவதனால் இதுபோன்ற இல்யூஷன் படங்கள் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது. பலரும் இந்த படங்களுக்கு நம்மால் விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இப்படி அவர்களால் விடையை கண்டுபிடிக்க முடிந்தது என்றால், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள்.

optical illusion offbeat trend

அவர்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று சோதித்து பார்க்கின்றனர். இதனால் இந்த படங்கள் அதிகம் இணையத்தில் பரவுகின்றன. அதுபோக இத்தகைய இல்யூஷன் படங்கள் ஒருவரது கவனிப்புத் திறன், பார்வைத்திறனை சோதிக்கும் வகையிலும் இருக்கின்றன. இதனால் ஆப்டிகல் புதிர் படங்கள் அரசு போட்டித் தேர்வுகளில் கூட கேட்கப்படுகின்றது. இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

இந்த இல்யூஷன் படமானது நன்கு வண்ண மயமாக கொடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே பச்சை பசேல் என்று, கிராமத்தில் வீட்டின் முத்தத்தில் உள்ளவை காண்பிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் பெரும்பாலானோர் வீடுகளில் கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவை வளர்க்கப்படும். அப்படித்தான் ஒருவர் வீட்டில் மாடு, கோழி உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் மாடு, கோழிக்குஞ்சுகள், பறவைகள் எல்லாம் கண்ணுக்கு பார்த்ததும் தெரியும் வகையில் உள்ளன.

ஆனால் கூவும் சேவற்கோழி இந்த படத்தில் எங்கே இருக்கிறது என்று யாராலும் பார்த்த உடனேயே சொல்ல முடியாது. அப்படித்தானே.. ஆனால் இந்த படத்தில் எங்கோ இந்த சேவல் ஒழிந்து இருக்கிறது. அந்த சேவல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 8 செகண்டுக்குள் கண்டுபிடிங்க பார்க்கலாம். பருந்துப் பார்வை கொண்டவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று சவால் விடப்பட்டுள்ளது.

உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3... ..8. ஓக்கே டைம் ஓவர். சேவல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடிந்ததா. குறிப்பிட்ட 8 செகண்டில் கண்டுபிடித்த எல்லாருக்கும் பாராட்டுக்கள். உங்கள் பார்வை பருந்துப் பார்வை தான். உங்கள் பார்வையில் இருந்து எதையும் மறைக்க முடியாது. ஆனால் இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்கள் வருத்தப்பட வேண்டாம். இன்னும் கூடுதலாக டைம் எடுத்துக்கொண்டு தேடிப்பாருங்கள்.

அப்போது முடியவில்லையே என்பவர்களுக்கு நாங்கள் ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது சேவற்கோழி முழுவதும் தெரியும் வகையில் இல்லை. மறைந்து இருக்கின்றது. எனவே தலைப்பகுதி மட்டுமே வெளியில் தெரியும். இப்போது தேடிப்பாருங்கள். அட ஆமா.. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. உங்களுக்கும் பாராட்டுக்கள். ஆனால் இப்போது கூட எங்கள் கண்களுக்கு சேவல் இருக்கும் இடம் தெரியவில்லையே என்று சொல்பவர்களுக்கு இன்னொரு டிப்ஸ் தருகிறோம்.

இந்த டிப்ஸை உங்களிடம் சொன்னால் நீங்கள் விடையை கண்டிப்பாக கண்டுபிடித்துவிடுவீர்கள். அதாவது படத்தின் மையப்பகுதியில் மட்டும் உற்று கவனித்து பாருங்கள். முதல் டிப்ஸையும், இரண்டாவது டிப்ஸையும் சேர்த்து பார்க்கும் போது கிட்டத்தட்ட 99.99 சதவீதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் சேவல் இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. ஏதேனும் குழப்பம் இருந்தால் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+