ஆமைகளுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் "பாம்பு" எங்கே இருக்கு? 9 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டுக்குள் ஆமைகள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. இந்த ஆமை கூட்டங்களுக்கு மத்தியில் பாம்பு ஒன்று மறைந்து இருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 9 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?.
ஆப்டிகல் மாயை எனப்படும் இல்யூஷன் படங்கள் கண்களை ஏமாற்றுவதோடு மூளைக்கும் வேலை கொடுக்கும். நமது சிந்தனைத்திறனை அதிகப்படுத்தும். ஒருவரது கவனிப்புத் திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதை சோதிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இல்யூஷன் படங்களை பார்த்து அதில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். ஒரு சில ஆப்டிகல் புதிர் படங்களில் எல்லாம் சின்ன டிரிக்ஸ் தான் கேள்விக்கான விடையாக இருக்கும். அதை கண்டுபிடித்துவிட்டாலே எளிதில் இல்யூஷன் படங்களுக்கான விடையை கண்டுபிடித்து சொல்லிவிடலாம்.
அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படமும் ஒரு சின்ன ட்ரிக்சை யூஸ் செய்து தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் அப்படி என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டால், பாம்பு எங்கே இருக்கிறது என்று தான் கேட்கப்பட்டுள்ளது. ஆமைகளுக்கு மத்தியில் மறைந்து இருக்கும் இந்த பாம்பை 9 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடப்பட்டுள்ளது. உங்களுக்கான நேரம் தொடங்கியது.
1.. 2.. 3.. ..9.ஓக்கே டைம் ஓவர். கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் பாம்பு இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருந்தால் நீங்க அதிபுத்திசாலி தான். உங்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் விடை எங்கே என்று தேடிக்கொண்டிருப்பவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை உற்று பாருங்கள். படத்தில் காடு போன்ற ஒரு பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சில செடிகள், புதர்கள் இருக்கின்றன. ஆமைகள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன.
பாம்பு தலையை தூக்கி நிற்பது போல எல்லா ஆமைகளும் காட்சியளிக்கின்றன. இதனால் தான் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் தான் நாம் புத்திசாலி போல் யோசிக்க வேண்டும். ஆமை என்றால் அதன் உடலான ஓடானது இருக்கும். இதேபோல் பாம்பு என்றால் எப்படியும் நாக்கை வெளியில் நீட்டும்.. அப்படித்தானே..
எனவே நாம் இந்த கோணத்தில் நிதானமாக யோசித்து பாம்பை தேடினால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இப்போது 50 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுக்கள். ஆனால் இன்னும் பாம்பு இருக்கும் இடம் தெரியவில்லையே என்பவர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது படத்தின் இடது புறம் அடிப்பகுதியில் தான் பாம்பு இருக்கிறது.
எனவே அங்கு மட்டும் உற்று கவனித்து பார்த்தீர்கள் என்றால் விடையை கண்டுபிடித்துவிடலாம். அட ஆமா.. என நீங்கள் நினைப்பது புரிகிறது. 99 சதவீதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள். பாம்பு எங்கே உள்ளது என்று தெரியாதவர்களுக்காக இங்கே கீழே கொடுக்கபட்டுள்ள படத்தில் பாம்பு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.













Click it and Unblock the Notifications