வித்தியாசமான "பூ" எது? 99% பேரால் கண்டுபிடிக்க முடியல.. உங்களால் முடியுமா? 5 செகண்ட் டைம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிசையாக பூக்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. பார்ப்பதற்கு எல்லா பூக்களும் ஒரே மாதிரி இருப்பது போல் தான் தெரிகிறது அல்லவா.. ஆனால் உற்று கவனித்தால் தான் இதில் ஒரே ஒரு "பூ" மட்டும் வித்தியாசமாக இருப்பது தெரியும். அந்த வித்தியாசமான பூ எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். 5 செகண்டில் கண்டுபிடித்து சொல்லுங்க.
போட்டி என்று வந்துவிட்டால் நாங்கல்லாம் சும்மா கில்லி மாதிரி சொல்லி அடிப்போம் என்று கெத்தாக சொல்பவர்கள் கூட இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சரியான விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறி விடுகிறார்கள். ஏனென்றால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்து இருக்கும் விடையானது அவ்வளவு எளிதில் நம் கண்களுக்கு புலப்படாதவாறுதான் உருவாக்கப்பட்டிருக்கும்.

இதன் காரணமாகவே பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூட இந்த இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிக்க முடியாமல் மூளையை போட்டு கசக்கி பிழிவார்கள். கண்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும், ஓய்வு நேரங்களிலும் பயனுள்ள விதமாக கழிப்பதற்கு உதவும் வகையில் இந்த படங்கள் இருப்பதனால் இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகின்றன.
அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. இந்த படத்தில் பார்ப்பதற்கு ஒரே போல் உள்ள பூக்கள் வரிசையாக அடுக்கி கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு வரிசையில் 7 பூ வீதம் மொத்தம் 5 வரிசையில் 35 பூக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 35 பூக்களும் ஒரே மாதிரி தான் இருப்பது போல் தெரிந்தாலும், இதில் ஒரே ஒரு பூ மட்டும் சற்று வித்தியாசமாக உள்ளது.
அந்த பூ எது? என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான சவால் ஆகும். 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான டைம் தொடங்கியது. வித்தியாசமாக இருக்கும் பூ எது என்று கண்டுபிடித்து சொல்லுங்கள். 1..2 .. 3.. 4.. 5. ஒகே டைம் ஓவர். குறிப்பிட்ட 5 செகண்டுக்குள் எந்த பூ வித்தியாசமாக இருக்கிறது என்று கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க ஜீனியஸ் தான்..
ஆனால், 99 சதவீதம் பேர் இதற்கான விடையை 5 செகண்டில் சொல்லவில்லையாம். எனவே குறிப்பிட்ட 5 செகண்டில் கண்டுபிடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு பாராட்டுக்கள். எனினும், எல்லாமே ஒரே மாதிரி தானே இருக்குது. இதில் என்ன வித்தியாசம் இருக்கு என்று நினைப்பவர்கள் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பூவாக கவனித்து பாருங்கள்.. விடை எளிதில் கண்அளுக்கு தெரிந்துவிடும்.
நாம் முதன் முதலில் பார்க்கும் போது எல்லா பூவும் ஒரே மாதிரியாக தெரிந்து இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பூவாக நாம் உற்று நோக்கி பார்க்கும் போது ஒரே ஒரு பூ வித்தியாசமாக இருப்பதை இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என திணறிக்கொண்டிருப்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். அதாவது படத்தின் 3வது வரிசையில் உள்ள 5வது பூவை மட்டும் பாருங்கள். மற்ற பூக்களை விட இது வித்தியாசமாக இருப்பதை இப்போது உணர்ந்து இருப்பீர்கள். அதாவது மற்ற பூக்களை விட வித்தியாசமாக உள்ள இந்த பூவில் உள்ள வட்டமானது சிறியதாக உள்ளது.
இதுவே படத்திற்கான விடையாகும். அப்படியும் குழப்பமாக இருக்கிறதே என்பவர்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம். விடை படத்தில் அந்த பூ பெரிதாக்கி காட்டப்பட்டுள்ளது. இந்த விடை படத்தை பார்த்துவிட்டு கேள்வி படத்தை பார்த்தீர்கள் என்றால் சட்டென புரிந்துகொள்ள முடியும்.

-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications