ஆப்டிகல் இல்யூஷன்: படத்தில் ”ரக்கூன்” எங்கே இருக்கு? 7 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க தான் "கெத்து"
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிறைய பாண்டா கரடிகள் உள்ளன. இந்த பாண்டா கரடிகளுக்கு மத்தியில் ஒரே ஒரு ரக்கூன் மறைந்து இருக்கிறது. இந்த ரக்கூன் எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். 7 செகண்டில் விடையை கண்டுபிடித்து சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன. மூளையை சுறுசுறுப்பாக்கி நம்மை தெளிவான முடிவுகளை எடுக்க வைக்க உதவுகின்றன. ஒரு செயலை செய்யவா செய்ய வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருப்பவர்கள், இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் படங்களுக்கு சரியான வகையில் விடையை கண்டுபிடித்து வந்தால், அவர்களால் தெளிவான முடிவினை எடுக்க முடியும்.

இதனால் ஓய்வு நேரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற இல்யூஷன் படங்களை பார்த்து நம்மால் விடையளிக்க முடிகிறதா என்று சோதித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் பலராலும் பரப்பப்பட்டு வருகிறது. அந்த இல்யூஷன் படத்திற்கு 100 க்கு 80 பேரால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடிந்துள்ளதாம். எனவே உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பாண்டா கரடிகள் கூட்டம் கூட்டமாக காட்டில் இருக்கின்றன. சிறு சிறு பூக்களும் புற்களும் இருப்பது போல் உள்ளது. படத்தை பார்க்கும் பலரது கண்களுக்கும் இது தான் தெரியும். ஆனால் நன்கு கூர்ந்து பார்த்தால், படத்தில் ரக்கூன் இருப்பது தெரியவரும். ஆம் இந்த படத்தில் பாண்டா கரடி மட்டும் இல்லை, ஒரே ஒரு ரக்கூனும் இருக்கிறது. ரக்கூன் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும்.
குறிப்பிட்ட 7 செகண்டுக்குள் ரக்கூன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. ..7. ஓக்கே டைம் ஓவர். குறிப்பிட்ட 7 செகண்டுக்குள் ரக்கூன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். உண்மையிலேயே நீங்கள் அதிபுத்திசாலி தான். எந்த ஒரு செயலிலும் தெளிவான முடிவு எடுக்கக் கூடியவராக நீங்கள் இருப்பீர்கள்.
ஆனால் படத்தில் பாண்டா கரடி மட்டும் தான் இருக்கிறது. ரக்கூன் இருப்பது போலவே தெரியவில்லையே என்று ஒருசிலர் நினைப்பது புரிகிறது. ரக்கூனுக்கு அணில் கரடி என்ற பெயரும் உண்டும். அணில் கரடி, பாண்டா கரடியில் இருந்து சற்று வேறுபட்டது. கிட்டத்தட்ட இரு விலங்கினமும் ஒரே போல் தோற்றம் இருப்பதனால் நம்மால் உடனடியாக கண்டுபிடித்துவிட முடியாது. கொஞ்சம் மூளையை யோசித்தால் விடையை கண்டுபிடித்திட முடியும்.
உங்களுக்காக ஒரு டிப்ஸ் ஒன்றையும் கொடுக்கிறோம். அதாவது படத்தில் உள்ள எல்லா பாண்டா கரடிகளின் தலைப்பகுதியை மட்டும் பாருங்கள். அதை கவனீத்தீர்கள் என்றால் விடை தெரிந்துவிடும். குறிப்பாக தலைமுடி, காது, கண், மூக்கு ஆகியனவற்றை மட்டும் பாருங்கள். பாண்டா கரடிக்கும் ரக்கூனுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு தெரிந்துவிடும். அட.. ஆமா. நாங்கள் விடையை கண்டுபிடித்துவிட்டோம் என்று நினைப்பது புரிகின்றது.
அதாவது ரஜினிகாந்தின் எந்திரன் படத்தில் ரோபோக்களை போலவே ரஜினிகாந்தும் வேடமணிந்து வந்திருந்தாலும், ரோபோக்கு வியர்க்காது, தலை ரொட்டேட் ஆகாது என்பதை வைத்து சிட்டி ரோபோ வசீகரனை கண்டுபிடிப்பது போல இந்த படத்திலும் பாண்டா கரடிக்கு மத்தியில் இருக்கும் ரக்கூனை நீங்கள் கண்டுபிடித்து விடலாம். இப்போது 99 சதவிகிதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications