உங்க கண்களுக்கு சேலஞ்ச்! படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது? 5 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் கண்களுக்கு சேலஞ்ச் கொடுக்கும் வகையில் இந்த படமானது அமைந்துள்ளது. 5 செகண்டில் பாம்பு இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகிறது. ஒருவரது கவனிப்புத் திறன் மற்றும் புத்திக் கூர்மையை சோதிக்கும் வகையிலும் இது போன்ற படங்கள் இருந்து வருவதால் பலராலும் பகிரப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன்
ஆப்டிகல் படங்களில் பல வகைகள் உண்டு. இல்யூஷன், புதிர் என நெட்டிசன்களின் மூளைக்கு தீனி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஓய்வு நேரங்களில் பயனுள்ள வகையில் நேரத்தை கழிப்பதற்கு இதுபோன்ற படங்கள் உதவுகின்றன. இன்று இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கலாம்.
பாம்பு எங்கே இருக்கிறது?
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படமானது கார்ட்டூன் முறையில் ஒரு பாலைவனத்தை குறிப்பது போல் உள்ளது. அதில் டெண்ட் ஒன்று அமைக்கப்பட்டது போலவும், அங்கே ஒருவர் அமர்ந்திருப்பது போலவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேள் ஊர்ந்து வருவது போன்றும், ஆங்காங்கே சப்பாத்தி கள்ளி இருப்பது போலவும் படம் இருக்கிறது.
இந்த படத்தில் தான் ஒரு பாம்பு ஒன்றும் இருக்கிறதாம்.. அந்த பாம்பு எங்கே என கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். உங்கள் கண்களுக்கு சேலஞ்ச் அளிக்கும் வகையில் இந்த படமானது அமைந்துள்ளது. இதற்காக 5 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் கண்டுபிடித்து விடையை சொல்லுங்கள் பார்க்கலாம்.
கண்டுபிடித்து விட்டீர்களா?
உங்களுக்கான டைம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4.. 5.. ஓகே டைம் ஓவர்.. யாரெல்லாம் விடைய கண்டுபிடித்து இருக்கிறீர்களோ நீங்கள் அபார கவனிப்புத்திறன் பெற்றவராக இருப்பீர்கள். உங்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் பாம்பு இருக்கும் இடம் தெரியவில்லையே என்பவர்கள் இன்னும் கூடுதலாக டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் ஒரு 5 செகண்ட் தேடிப்பாருங்கள்.
இப்போதும் தெரியவில்லை என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது படத்தில் வலதுபுறம் மேல் பகுதியில் மற்றும் கூடுதலாக கவனித்து பாருங்கள். அங்கு பாம்பு இருக்கிறது தெரியும்.. அட.. ஆமா.. என நீங்கள் நினைப்பது புரிகின்றது.

இதுதான் விடை
இப்போதும் எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே என்பவர்களுக்காக இங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பாம்பு இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications