ஜீனியஸ்களால் தான் முடியும்.. படத்தில் "பெண்ணின் கணவர்" எங்கே இருக்கிறார்? 8 செகண்டில் சொல்லுங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பிளாக் அண்ட் ஒயிட் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெண்ணின் கணவரை காணவில்லையாம். படத்தில் மறைந்து இருக்கும் அவர் எங்கே இருக்கிறார்? என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான சவால். 8 செகண்டில் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் ஜீனியஸ் தான்.
பார்க்கும் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றன. மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும், ஆழ்ந்து பார்த்தால் வேறுவித தோற்றத்தையும் காண்பிக்கும். முதலில் நாம் படத்தை பார்க்கும் போது விடை அவ்வளவு எளிதில் கண்களுக்கு தெரிந்துவிடாது. பருந்து பார்வை உள்ளவர்களால் மட்டுமே விடையை பார்த்த உடன் கண்டுபிடிக்க முடியும்.

100க்கு 99 சதவீதம் பேரால் விடையை கணிக்க முடியாத அளவுக்கு தான் இந்த படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். படத்தின் விடையை கண்டுபிடிக்க முயற்சிப்பவர்ளின் கண்களை ஏமாற்றி ஒரு நிமிடம் தலைசுற்ற வைத்துவிடும். அந்த வகையில் தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இந்த இல்யூஷன் படத்தின் விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள்.
உங்களால் சரியாக விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். சரி விஷயத்திற்கு வருவோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பெண் ஒருவர் உள்ளார். அவரது அருகில் நாய் ஒன்று உள்ளது. பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் உள்ள இந்த படத்தில் பாலத்தின் மீது பெண் ஒருவர் நின்றுகொண்டு இருப்பது போல் உள்ளது. அவர் கையில் ஒரு கூடையை வைத்துள்ளார். அதில் சில எழுத்துக்களும் உள்ளன. சுற்றிலும் மரங்களும் செடி, கொடிகளும் இருக்கின்றன.
பாலத்தின் சுவர் மீது சில புத்தகங்கள் உள்ளன. பாலத்தின் அடியில் செல்லும் தண்ணீரில் அப்படியே நாய், பெண், புத்தகங்கள் தெரிகின்றன. நாம் படத்தை பார்த்ததும் நம் கண்களுக்கு இவை மட்டும் தான் தெரிகிறது அப்படித்தானே.. ஆனால் நன்கு உற்று பார்த்தால் இந்த படத்தில் ஒரு ஆண் ஒருவர் இருப்பதும் நம் கண்களுக்கு தெரியும். அதாவது ஜீனியஸ்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் மறைந்து இருக்கிறார் அவர்.
படத்தில் மறைந்து இருக்கும் அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இது தான் உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். என்ன போட்டிக்கு ரெடியா?.. உங்களுக்கு 8 செகண்ட் கொடுக்கப்படுகிறது. அதற்குள் விடையை கண்டுபிடியுங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 8. ஓகே டைம் ஓவர். 8 செகண்டில் அந்த நபர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க ஜீனியஸ்தான். உங்க பார்வை பருந்து பார்வை தான்.
ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இன்னும் தேடிக்கொண்டிருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். மீண்டும் ஒரு முறை பாருங்கள். அந்த ஆண் வேறு யாருமில்லை. படத்தில் உள்ள பெண்ணின் கணவர் தான். இதை எப்படி சொல்லுகிறோம் என்று தானே யோசிக்கிறீர்கள். படத்தில் பெண் வைத்திருக்கும் கூடையில் லியோன் என எழுதியிருக்கிறது. அதை வைத்து தான்.
சரி லியோன் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடிந்ததா?.. கண்டுபிடிக்க முடியவில்லையே என்றால் உங்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது வழக்கம் போல் படத்திற்கான விடை படத்தின் வலதுபுறத்தில் தான் இருக்கிறது. இதனால் படம் முழுக்க தேடாமல் வலதுபுறம் மட்டும் உற்று கவனியுங்கள். இப்போது 80 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஆனால் இன்னும் விடை தெரியவில்லையே என்பவர்கள் படத்தின் வலதுபுறத்தில் டாப்பில் மட்டும் ஒரு ஆணின் தலை மட்டும் தெரிகிறதா என்று பாருங்கள். முழு உருவமும் இல்லாமல் முகம் மட்டும் தெரியும் வகையில் தான் விடை இருக்கிறது. இப்போது 99 சதவீதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள். மீதமுள்ள ஒரு சதவீதம் பேருக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.













Click it and Unblock the Notifications