"மன்னவன் காவிய நாயகனே..” விஜயகாந்த் இல்லாத அவரது முதல் பிறந்தநாள் இன்று! கலங்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் 72வது பிறந்ததினம் இன்று. தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், கடந்த ஆண்டு இறுதியில் மறைந்தபோது, "வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே.." என ஒட்டுமொத்த தமிழகமே கலங்கியது. இன்று அவர் இல்லாத அவரது முதல் பிறந்தநாளில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மதுரை மண்ணில் இருந்து சினிமா கனவுடன் சென்னைக்குப் புறப்பட்ட விஜயராஜ், பிற்காலத்தில் விஜயகாந்த் ஆக சினிமா உலகையே கட்டி ஆண்டது வரலாறு. இனிக்கும் இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முகம் காட்டிய விஜயகாந்த், 1980இல் வெளியான தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மூலம் கவனிக்கப்பட்டு, பின் நாட்களில் தனது நடிப்பின் மூலம் தமிழர்கள் நெஞ்சில் இடம் பிடித்தார்.

Vijayakanth DMDK Cinema

தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஆண்கள் பெண்கள், இளசுகள், சிறுவர்கள் என அனைவரும் விஜயகாந்தின் ரசிகராகிப் போக அன்றைய காலகட்டத்தில் இயக்குநர்கள் கொண்டுவந்த குடும்பக்கதை, கிராமத்துக் கதை, போலீஸ் கதாபாத்திரம் என விதவிதமான கதைக்களங்களில் விஜயகாந்த் நடித்து அசத்தினார்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் சாதனையாக 1984 ஆம் ஆண்டு 'மதுரை சூரன்' முதல் 'ஜனவரி 1' படம் வரை 18 படங்களும் 1985 ஆம் ஆண்டில் மட்டும் 'அலை ஓசை'யில் ஆரம்பித்து 'நானே ராஜா நானே மந்திரி' வரை 17 படங்களிலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார் விஜயகாந்த். இன்றளவும் அவரது அந்தச் சாதனை ஒரு கதாநாயகனின் உச்ச சாதனை.

தனது படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான உணவு பரிமாறுவதை தொடங்கினார். இதன்பிறகே பலரும் இதை பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்கத் தலைவராக இருந்த காலகட்டத்தில் சிறந்த நிர்வாகத் திறமையோடு செயல்பட்டு நடிகர் சங்க கடனை அடைத்து பத்திரத்தை மீட்டவர் விஜயகாந்த்.

அவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார் என பலரும் பாராட்டி இருக்கின்றனர். நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி, நடிகர் சங்கத்திற்கு இருந்த மொத்த கடன்களையும் அடைத்து முடித்து, வங்கியில் வைப்பு நிதியும் வைத்த பெருமை விஜயகாந்திற்கு மட்டுமே உண்டு.

நடிகர் விஜயகாந்த் உதவும் குணம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தன்னைச் சந்திக்க வருபவர்கள் சாப்பிட்டார்களா எனக் கேட்டு அவர்கள் வயிறாரச் சாப்பிட்டுச் செல்வதை உறுதி செய்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் அலுவலகத்தில் எப்போதும் சமையலுக்கு அடுப்பு எரியும் எனச் சொல்வார்கள். விஜயகாந்த் மறைவின்போது ஒவ்வொருவரும் நினைவுகூர்ந்ததும் அவரது பசிப் பிணியாற்றிய பண்பு தான்.

அரசியலில் இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கோலோச்சிய காலத்தில், 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை உருவாக்கியது மட்டும் இல்லாமல் 2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இவரின் கூட்டணிக்காக காத்திருந்ததை நாடறியும். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்.

Vijayakanth DMDK Cinema

திமுக, அதிமுக கட்சிகளுக்கு பெரும் மாற்று சக்தியாக கருதப்பட்ட விஜயகாந்த்தின் உடல் நலனில் ஏற்பட்ட பின்னடைவு, கட்சியின் வளர்ச்சியையும் பாதித்தது சோகம். கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மண்ணை விட்டு மறைந்தார். அவரது மறைவுக்கு சென்னையில் கூடிய கூட்டம், உகுத்த கண்ணீர் தமிழ்நாட்டையே கலங்கச் செய்தது.

விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலமான போது, தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவே கண்ணீர் சிந்தியது. அரசியல் தலைவர்கள் தொடங்கி, திரைக் கலைஞர்கள், சாமானிய மக்கள் வரை நேரில் சென்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று, விஜயகாந்த் இல்லாத அவரது முதல் பிறந்த நாள்.

தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக கேப்டன் விஜயகாந்த் கடைபிடித்து வந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விஜயகாந்த் பிறந்தநாள் 'வறுமை ஒழிப்பு தினமாக’ கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அன்றைய தினம் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இலவச வீட்டு மனைகள், இலவச திருமணம், பெண் குழந்தைகள் வைப்பு நிதி, இலவச கணினி பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் தேமுதிகவால் செய்யப்பட்டன. மேலும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தேமுதிக தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் விஜயகாந்த் முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+