ப்ரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரில் ஒரே மிதி! தாறுமாறாக தறிகெட்டு ஓடிய கார்! சென்னையில் ஷாக் சம்பவம்!
சென்னை: சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் தாறுமாறாக ஓடிய கார், ஆட்டோ மற்றும் சாலையோரம் இருந்த கடைகள் மீது மோதிய விபத்தில் இருவர் பலத்த காயம் அடைந்தனர். காரின் ஓட்டுநர் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் விபத்து நேரிட்டதாக கூறப்படும் நிலையில், சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றாக வேளச்சேரி 100 அடி சாலையும் மிக முக்கியமானதாக உள்ளது. கிண்டியிலிருந்து வேளச்சேரி பீனிக்ஸ் மால் வரை செல்லும் இந்த சாலையில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பிரபல மால்கள் உள்ளன.

இதனால் எப்போதும் அந்த சாலை பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் தான் இன்று அந்த சாலையில் விபத்து ஒன்று நேரிட்டுள்ளது. இந்த சாலையில் சென்னை கிண்டியில் இருந்து வேளச்சேரி நோக்கி மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் முன்னே சென்ற இரு சக்கர வாகனம் திடீரென நின்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த காரின் ஓட்டுனர், அப்பொழுது முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டுள்ளார்.
ஆனால், அவசரத்தில் காரின் ப்ரேக் லிவரை அழுத்துவதற்கு பதிலாக ஓட்டுனர் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதாகக் கூறப்படுகிறது. இன்று அந்த சாலையில் விபத்து ஒன்று நேரிட்டிருக்கிறது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மாருதி ஸ்விப்ட் கார் அதிவேகமாக தாறுமாறாக சென்றுள்ளது. அப்போது சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கார் வேகமாக மோதியது.
கார் மோதிய வேகத்தில் ஆட்டோவும் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டு சாலை ஓரத்தில் இருந்த இளநீர் கடை மற்றும் பாதசாரிகள் இருவர் மீது பயங்கரமாக மோதியது. திடீரென நடந்த விபத்தால் அந்த இடமே போர்க் களம் போல காட்சி அளித்தது. மோதிய வேகத்தில் காரும் ஆட்டோவும் சேதம் அடைந்ததோடு இளநீர் கடையில் நின்றிருந்த கடைக் காரர் மற்றும் பாதசாரிகள் இருவர் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் ஆட்டோவில் ஓட்டுனர், இளநீர் கடைக்காரர் மற்றும் சாலையில் நடந்து சென்ற இருவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தனர். இதை அடுத்து அருகில் இருந்தோர் உடனடியாக தமிழ்நாடு அரசின் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த நான்கு பேரும் மீட்கப்பட்டு கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காரை வேகமாகவும் கவனக் குறைவாகவும் இயக்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது காயமடைந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில், கிண்டி போக்குவரத்து புலனாய்வு துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தின் போது அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications