"லாரியின் அடியில் சிக்கிய கார்"! தமிழக-கேரளா தேசிய நெடுஞ்சாலையில் திகிலூட்டும் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக - கேரளா தேசிய நெடுஞ்சாலையில், லாரியின் பின்புறம் கார் ஒன்று சிக்கிக் கொண்ட நிலையிலும், அதனை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் வாகனத்தைத் தொடர்ந்து இயக்கிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக - கேரளா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் இரவு கனரக லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பகுதியில் பலமாக மோதிச் சிக்கிக் கொண்டது.

car lorry tamil nadu

ஆனால், காரின் மோதிய சத்தத்தையோ ? அல்லது பின்னால் கார் சிக்கி இருந்ததையோ ? லாரி ஓட்டுநர் கண்டு கொள்ளாமல் லாரியைத் தொடர்ந்து இயக்கிச் சென்று உள்ளார்.

இதனால் விபத்துக்கு உள்ளான கார், லாரியின் பின்புறம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்தத் திகிலூட்டும் காட்சியை, அந்த லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு காரில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளனர்.

தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

car lorry tamil nadu

சாலையில் வாகனங்களை இயக்கும் போது பின்னால் என்ன நடக்கிறது ? என்பதைக் கூட கவனிக்காமல் அஜாக்கிரதையாக லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநரின் மெத்தனப் போக்கையும், அதே வேளையில் சாலையில் லாரிக்கு பின்னால் பாதுகாப்பான இடைவெளி விட்டு கவனமாக காரை இயக்காத கார் ஓட்டுநரின் தவறை சுட்டிக்காட்டியும் வாகன ஓட்டிகளும், இணையவாசிகளும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆபத்துகள் என்னென்ன

லாரி திடீரென பிரேக் பிடித்தாலோ அல்லது வளைவுகளில் திரும்பினாலோ பின்னால் இழுத்து வரப்படும் கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் வரும் வாகனங்கள் மீது மோத வாய்ப்பிருக்கிறது.

car lorry tamil nadu

காரின் முன் பகுதி மற்றும் டயர்கள் சாலையில் அதிகமாக உராய்ந்து இழுத்துச் செல்லப்படும் போது அதிக அளவிலான வெப்பம் உருவாகி தீப்பற்றும் அபாயம் ஏற்படலாம். காரின் முன் பகுதி சேதமடைந்து எஞ்சின் மற்றும் எரிபொருள் குழாய்களில் முறிவு ஏற்பட்டால் பெட்ரோல் கசிந்து தீவிபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இழுத்துச் செல்லப்படும் காரின் உதிரிபாகங்கள் உடைந்து பின்னால் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் கார், லாரியின் பின்புற விளக்குகளை மறைத்துக் கொண்டே செல்வதால் அந்த லாரி இடது , வலது திரும்புவது பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரியாது. பிரேக் பிடித்தாலும் தெரியாது. பொதுவாக வாகனங்கள் tow செய்தாலே பாதுகாப்பாக கொண்டு செல்வது வழக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+