அதிகரிக்கும் தள்ளுவண்டிக் கடைகள்.. வியாபாரிகள் ஹேப்பி.. மக்களும் மகிழ்ச்சி!
சென்னை: கொரானா தொற்று பரவி வரும் சூழலில் கடந்த 24-ம் தேதி முதல் தமிழகத்தில் தளர்வுகளின்றி ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழக அரசின் வேளாண்துறை சார்பில் தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் வீடு வீடாக சென்று காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வருகிறது.

முதலில் 1000 வாகனங்கள் இருந்த வீதத்தில் தற்போது 5000 வாகனங்களுக்கு மேல் சென்னையில் மட்டும் செயல்படுகின்றது.
நடமாடும் கடைகள் அதிகமான காரணத்தினால் அதிக அளவில் வியாபாரம் இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுமக்களும் குறைந்த அளவே வாங்கி செல்கிறார்கள் எனவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
அதிக விலை விற்பதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டு எழுகிறது என்று கேட்டதற்கு, மொத்த விற்பனையில் வாங்கி வந்து கூடுதலாக 5 அல்லது 10 ரூபாய்க்கு விற்றால் தான் லாபம் கிடைக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
விலைகள் பொறுத்தவரை , உருளைக் கிழங்கு கிலோ -ரூ. 40 , காரட் கிலோ -ரூ. 50 , இஞ்சி - ரூ. 80, மிளகாய் - ரூ.50
தக்காளி கிலோ - ரூ. 50, பீன்ஸ் கிலோ -ரூ.120, வெங்காயம் கிலோ - ரூ. 30க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஊரடங்கு நேரத்தில் இது போன்ற முயற்சி மேற்கொண்டது உதவியாக உள்ளது. இதற்கு தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். விலை பொறுத்தவரை குறைந்த அளவில் தான் உள்ளது, அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் அளவிற்கு விலை குறைவாகத்தான் உள்ளது. மளிகைப் பொருட்கள் விற்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications