அதிமுக உட்கட்சித்தேர்தல் முடிவை எதிர்த்த வழக்கு: தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரிய சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

அதிமுக உட்கட்சித்தேர்தல்
அதிமுக உட்கட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட அடிப்படையில் செயற்குழு கூடி கட்சி விதிகளை திருத்தி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிச.7 அன்று தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. டிச.3 வேட்புமனு தாக்கல் என அறிவித்திருந்தது.

போட்டியின்றி தேர்வான ஓபிஎஸ்-இபிஎஸ்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் இருவரும் ஒரே நேரத்தில் ஒற்றை வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் செய்த ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வானதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவை எதிர்த்த வழக்கு
அதிமுக கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி ஓசூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், "இந்த தேர்தலில் போட்டியிட யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்றும் ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிட வில்லை. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுவதாக கூறி, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆகவே இருவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையத்தை வழக்கில் சேர்த்தது குறித்த அமர்வின் ஆட்சேபம்
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, உள்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு என்றும், எந்த பங்கும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்ததால் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசியல் ஜனநாயக உரிமை
இதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கட்சியில் நடந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என்பதாலும், ஜனநாயகம் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் எனவும், வாக்குரிமை என்பது அரசியல் சட்ட உரிமை என்றும் தெரிவித்தார்.
அரசியல் சாசனத்தின் ஜனநாயக உரிமையை மீறி செயல்படும் போது அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்பதற்கான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு
மேலும், தேர்தலுக்கு முந்தைய நாள், போட்டியின்றி இருவரை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications