ஓபன் பண்ணா.. ஒரே அசிங்கம்! அண்ணாமலையுடன் போட்டோ.. கருணாநிதியையும் விடல - பாஜக ஆதரவாளர் மீது வழக்கு
கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரை ட்விட்டரில் தரக்குறைவாக விமர்சித்து பாஜக ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திமுக ஐடி விங் தெரிவித்து உள்ளது.
சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரை தரக்குறைவாக விமர்சித்து தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வந்த பாஜக ஆதரவாளர் ஜான் ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக திமுக ஐடி விங் தெரிவித்து உள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் ஓஎம்ஆர் பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மகன் ஜான் ரவீந்திரநாத். பாஜக ஆதரவாளரான இவர் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
குறிப்பாக ட்விட்டரில் பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்தும், திமுக, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசை, பாஜகவை விமர்சிப்பவர்களை எதிர்த்தும் கருத்திட்டு இருக்கிறார்.

அண்ணாமலையுடன் படம்
பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ட்விட்டரில் கவர் படமாக வைத்து உள்ள அவர், சங்கி என்று தன்னுடைய பயோவில் குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் இவர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நிற்பதை போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஜான் ரவியின் ட்விட்டர் பதவுகள் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளன.

தரக்குறைவான பதிவுகள்
அதில் பாரதிய ஜனதா கட்சியையும், அதன் தலைவர்களையும், மத்திய அரசையும் விமர்சிப்பவர்களையும் கொச்சைப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், நடிகைகள், பெண்களை இவர் தகாத முறையில் விமர்சித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ்
குறிப்பாக கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்வது குறித்து தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவரது ஆபாச படம் ஒன்றை பகிர்ந்து அவரை தகாத முறையில் விமர்சித்து இருந்தார்.

கருணாநிதி
மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் தாடையை அமைச்சர் துரைமுருகன் பிடித்து இருப்பதை போன்ற படத்தை பதிவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், கருணாநிதியையும் துரைமுருகன் இழிவாக பேசுவதைபோல் கற்பனை பதிவு ஒன்றை நகைச்சுவை என்ற பெயரில் வெளியிட்டு உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
அதேபோல் குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்ற படத்தை பகிர்ந்து "இன்று நாம் நாட்டுக்கே ராசாவாக இருந்தாலும் நாம் யார் என்கிற அடையாளத்தை மறக்கவே கூடாது" என்று விமர்சித்தார். இவரது பழைய ஸ்க்ரீன்ஷாட்டுகளை பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

வழக்குப்பதிவு
இந்த நிலையில் திமுக ஐடி பிரிவிடமும் இந்த புகாரை திமுகவினர் மற்றும் நெட்டிசன்கள் முன்வைத்தனர். இந்த நிலையில் திமுக ஐடி விங் நடத்தும் ITW ரிப்போர்ட்ஸ் என்ற ட்விட்டரில் கணக்கில், ஜான் ரவி மீது புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரம் கழித்து வெளியிட்ட மற்றொரு பதிவில் ஜான் ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திமுக ஐடி விங் தெரிவித்து உள்ளது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications