டாஸ்மாக் கடைகள்.. 24 பேர் போட்ட விசித்திரமான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபான கடைகளில் 500 கடைகளை மூடுவது என தமிழக அரசு முடிவெடுத்து, குறைந்த விற்பனை உள்ள கடைகள், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் உள்ள கடைகள், நீண்ட நாட்களாக பொதுமக்கள் ஆட்சேபிக்கக்கூடிய இடங்களில் உள்ள கடைகளை மூடுவது என விதிகள் வகுக்கப்பட்டன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மண்டல மேலாளர்கள் பரிந்துரைப்படி, குறைந்த வருவாய் உள்ளவை, குறைந்த இடைவெளியில் அருகருகே உள்ளவை, வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ளவை, நீதிமன்ற உத்தரவு உள்ளவை, நீண்ட நாளாக பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் கடைகள் என 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டன.
சென்னை வடக்கில் 20, சென்னை மத்தியில் 20, சென்னை தெற்கில் 21, காஞ்சிபுரம் வடக்கில் 15, காஞ்சிபுரம் தெற்கில் 16, திருவள்ளூர் கிழக்கில் 32, திருவள்ளூர் மேற்கில் 14 என சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்பட்டன,
கோயம்புத்தூர் மண்டலத்தில் கோவை வடக்கு, தெற்கு, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூரில் 78 கடைகள் மூடப்பட்டன. மதுரை மண்டலத்தில் மதுரை வடக்கு, தெற்கு, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனியில் 125 கடைகளும், சேலம் மண்டலத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணத்தில் 59 கடைகளும் மூடப்பட்டன.
திருச்சி மண்டலத்தில் திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 100 கடைகள் என தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 5,329 கடைகளில் 500 கடைகள் மூடப்பட்டன,
500 கடைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், அரசு வகுத்த விதிகளின்படி கடைகள் மூடப்படவில்லை என்றும், மூடுவதற்கு வகுத்த விதிகளை மீறி, தங்கள் கட்டடங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளதாக, பாலமுருகன், அமல்ராஜ், நாகேஸ்வரி உள்ளிட்ட 24 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தங்களது கட்டடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை தொடர்ந்து நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.சரவணன், வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications