மாலை 4.30 மணி வரை கெடு.. செங்கல்பட்டு கலெக்டர், தாம்பரம் கோட்டாட்சியர் மீது வழக்கு.. ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் நிலத்தை அபகரித்து அரசு நிலமாக மாற்றியதாக எழுந்த புகாரில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் முதல், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம் தாசில்தார், செங்கல்பட்டு நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாலை 4.30 மணி வரை கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம்.ஆர்.வசந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் கடந்த 2024-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த மனுவில், "செங்கல்பட்டு மாவட்டம், சேலையூரில் எனக்கு சொந்தமான ஆயிரத்து 318 சதுர மீட்டர் பட்டா நிலத்தை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நீர்வழிப்பாதையாக மாற்றி விட்டனர். எனவே அந்த நிலத்தை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Case filed against Chengalpattu Collector over allegations of private land grabbing HC order

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் தனிநபரின் நிலத்தை அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பது என்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும். அந்த நிலம் தற்போது பொது பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டு விட்டதால், மனுதாரருக்கு தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் உரிய இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்" என்று கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தார்கள்.

இந்த உத்தரவின்படி நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் 2 கோடியே 90 லட்சத்து 64 ஆயிரத்து 375 ரூபாய் நிர்ணயம் செய்து அதற்கு நிர்வாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தாம்பரம் தாசில்தார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.பி.செங்கோட்டுவேல், வக்கீல் எம்.லெனின் ஆகியோர், "மனுதாரர் நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து ஓராண்டு 4 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை இழப்பீட்டுத் தொகையை அதிகாரிகள் வழங்கவில்லை" என்று வாதிட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.ஹரிஷ்வந்த், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "தனிநபர் நிலத்தை பொது பயன்பாட்டுக்கு என்று கூறி விதிகளை பின்பற்றாமல் அதிகாரிகள் துணிச்சலாக அபகரித்திருக்கிறார்கள். இந்த சட்டவிரோத செயலை கருணையுடன் சரி செய்ய, தகுந்த இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளருக்கு வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஓராண்டு 4 மாதங்களாகியும் இதுவரை இழப்பீட்டுத் தொகையை மனுதாரருக்கு அதிகாரிகள் வழங்கவில்லை.

எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் முதல், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம் தாசில்தார், செங்கல்பட்டு நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சட்டவிதிகளை பின்பற்றாமல், மனுதாரர் நிலத்தை அபகரித்துள்ளனர். இவர்களது செயல், பொதுப்பயன்பாடு என்ற பெயரில் செய்துள்ள நில அபகரிப்பு குற்றம் ஆகும்.

எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுதாரர் புகார் செய்யவேண்டும். அவ்வாறு கொடுக்கப்படும் புகாரை உடனடியாக விசாரணைக்கு எடுத்து சட்டப்படி நடவடிக்கையை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும். அதாவது, வழக்குப்பதிவு செய்தது குறித்து இன்று (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்குள் செங்கல்பட்டு போலீஸ் எஸ்பி (காவல் கண்காணிப்பாளர்) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+