சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விளக்கை அணைத்து விட்டு.. இருட்டில் நின்று பேசிய சீமான்.. வழக்கு பதிவு செய்த போலீஸ்!

சீமான் மீது செங்கல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு, இருட்டில் நின்று சீமான் பிரச்சாரம் செய்ததையடுத்து, அவர் மீது செங்கல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி இந்த முறை தேர்தலிலும் சிங்கிளாகவே கர்ஜிக்க போகிறது.. வேட்பாளர் அறிமுகத்தை அடுத்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.

 Case filed against Seeman in Chengapet Campaign

அந்த வகையில், செங்கல்பட்டு தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார்.. அங்கு சஞ்சீவிநாதன் என்பவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்க பிரச்சாரம் தயாரானது.. செங்கல்பட்டு பழைய பஸ் ஸ்டேண்ட் அருகே பிரச்சாரத்திற்காக ஏற்பாடுகள் தயாராகின.

சீமான் பேச்சை கேட்க, ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் அங்கே குவிந்திருந்தனர்.. ஆனால், ராத்திரி 10 மணி ஆகியும் சீமான் வரவேயில்லை.. தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. பிறகு, தேர்தல் விதிமுறைகளின்படி இரவு 10 மணிக்குள் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும்..

"ஹீரோ".. திமுகவா இப்படி.. நம்பவே முடியலையே.. ஆனா "அந்த" ஒரு விஷயம்தான்.. வியந்து பார்க்கும் தமிழகம்

சீமான் வராத காரணத்தினால், போலீசார் அந்த லைட்டுகள் எல்லாவற்றையும் அணைத்தனர்.. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால், அந்த இடமே இருட்டாகிவிட்டது. அப்போதுதான் சீமான் அங்கு வந்தார்.. வேனில் நின்று கொண்டே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்... அதனால், தேர்தல் விதிமுறையை மீறி 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த சீமான் மீது செங்கல்பட்டு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்..

இன்னும் வேட்பாளர் லிஸ்ட்டுகளை பல கட்சிகள் அறிவிக்காத நிலையில், அதற்குள் சீமான்மீது முதன்முதலாக வழக்கு பதிவாகி உள்ளது.

English summary
Case filed against Seeman in Chengapet Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X