கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றமா? அத்தனை வழக்குகளும் ஜூலை 18ல் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய அனைத்து வழக்குகளும் அடுத்த வியாழன் அன்று விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் என மொத்தம் 225 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

kallakurichi high court illicit liquor

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்தது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தன. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தத் தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

கள்ளச் சாராய மரணம் குறித்து நியாயமான நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு அதன் பின்புலத்தில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவர வேண்டும் என்றால் வழக்கு சிபிஐ விசாரித்தாக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன. இதுதொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை, பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு, பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏ.மோகன் தாஸ், வால்பாறை முன்னாள் எம்எல்ஏ-வான டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் சிபிஐ விசாரணை கோரி ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த முறை விசாரணையின்போது மாநில காவல் துறை விசாரித்து வரும் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை எனவும் சில அரிதான அல்லது விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரணை கோர முடியும். இந்த வழக்கில் 10 மேற்பட்ட நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் விசாரணை சரியான முறையில் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய அனைத்து வழக்குகளும் அடுத்த வியாழன் அன்று விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷஃபிக் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+