சாதி பெயர்கள் எதுக்கு? TNPSC குருப் 1 கேள்விகளால் வெடித்த சர்ச்சை.. நெட்டிசன்கள் விமர்சனம்
சென்னை: இன்று தமிழ்நாடு முழுக்க திட்டமிட்டபடி க்ரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டது. மாநிலம் முழுக்க சுமார் 2.49 லட்சம் பேர் இந்த தேர்வுகளை எழுதினர். இதற்கிடையே க்ரூப் 1 தேர்வுகளில் இரு கேள்விகளுக்கு விடைகளில் சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நெட்டிசன்கள் சிலர் இதைக் குறிப்பிட்டு இணையத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர் உட்பட 70 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.. இதற்காக மாநிலம் முழுக்க மாநிலம் முழுக்க 2.49 லட்சம் தேர்வாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

க்ரூப் 1 தேர்வு
இன்று காலை திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் க்ரூப் 1 தேர்வுகள் நடைபெற்றன. தமிழகத்தில் மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்றது. தேர்வு கண்காணிப்பு பணியில் 980+ பேர் ஈடுபட்டு இருந்தனர். குறிப்பாகச் சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடைபெற்றது. எந்தவொரு குழப்பமும் இல்லாமல் தேர்வுகள் நடந்து முடிந்தன.
இதற்கிடையே க்ரூப் 1 தேர்வுத்தாள்களில் இடம்பெற்றிருந்த கேள்விகள் குறித்து பலரும் இப்போது விவாதித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த தேர்வில் கேட்கப்பட்ட சில கேள்விகள் இப்போது சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது. சாதிப் பெயர்களுடன் சில கேள்விகளுக்கு ஆப்ஷன்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததாக விமர்சனம் கிளம்பியுள்ளது.

சாதி பெயர் சர்ச்சை
அதில் ஒரு கேள்வியில், "ரத்தம் சிந்தாமல் எதுவும் செய்ய முடியாது. ஜப்பான் 20,000 வீரர்களைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தது. ரஷ்யாவை வென்றது. 15 கோடி இந்தியர்கள் இதைச் செய்தால், "சுயராஜ்யம்" கிடைக்கும் என்று கூறிய நபரை அடையாளம் காணவும் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.
அதற்கு வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி, வாஞ்சி ஐயர் ஆகிய நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் வ.உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் வாஞ்சி ஐயர் பெயர்கள் சாதிப் பெயர்களுடன் குறிப்பிட்டதை நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகிறார்கள். வஉசி மற்றும் வாஞ்சிநாதன் என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

நெட்டிசன்கள் சொல்வது என்ன
அதேபோல மற்றொரு கேள்வியில் முத்துசாமி பிள்ளை, ஏ ஆர் முதலியார் ஆகியோர் ஆகியவையும் ஆப்ஷனாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதையும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் என்பதால் இதில் சாதி பெயர்களைத் தவிர்த்திருக்க வேண்டும் என்பதே நெட்டிசன்கள் கருத்தாக உள்ளது.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் சாதிப் பெயர்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படவில்லை. இவை அனைத்தும் புழக்கத்தில் இருக்கும் பெயர்கள் தான். முழு பெயராகக் குறிப்பிடாமல் போனால் தேர்வாளர்களுக்குக் குழப்பம் ஏற்படும் என்பதாலேயே முழு பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும் என கூறி வருகிறார்கள்.
இரண்டு மாதங்களில் முடிவுகள்
முன்னதாக இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வுக்கான ரிசல்டானது இரண்டு மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் கூறியிருந்தார். இன்று தேர்வு நடந்து முடிந்த நிலையில், இதன் முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சியின் மூலம் இந்த ஆண்டு 15,236 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications