சாதி, மதமற்றவர் என சான்றிதழ்.. நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பார்த்திபன் மீதான மனு மீது தமிழக அரசு பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நடிகர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''சாதி, மதமற்றவர் என சான்றிதழ் கோரி வழங்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழல அரசுக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

Madras High Court

ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், அப்போதைய அரசுக்கும் சுமூக உறவு இல்லாத காரணத்தால், இந்த உத்தரவானது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் இந்த நிலை மாறியிருப்பதால் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்கள் உடனடியாக சான்றிதழ் பெறும் வகையில், சட்டம் அல்லது அரசாணை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த சட்டம் இயற்றுவதால் வேறு எந்த சட்டத்துக்கும் எந்த பாதிப்பு ஏற்படப் போவதில்லை. இந்த சட்டம் இயற்றப்பட்டால் சாதி, மதமற்றவர் என சான்று கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும்" என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கானது தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சாதி மதமற்றவர் என சான்று பெற குடிமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கிறது. எனவே இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று அருண்குமார் என்பவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதனை நீதிபதிகள் ஏர்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், "பார்த்திபன் தொடர்ந்துள்ள வழக்கு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு மூலம் பொதுமக்கள் பயனடைவார்கள். எனவே இடையீட்டு மனு தேவையில்லை. பார்த்திபனின் மனுவுக்கு 4 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+