மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி விவரம்.. சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2027 சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில், மத்திய, மாநில அரசுகளால் வெளியிடப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்ட அனைத்து சாதிகளின் பெயர்களையும் கணக்கெடுப்பு செயலியில் பதிவேற்றம் செய்து அதில் உள்ள பெயர்களின் அடிப்படையிலேயே விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் அரசு தனித்தீர்மானம் தாக்கல் செய்ய ள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் தீர்மானத்தை முன்மொழிகிறார். இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளும் பங்கேற்று உரையாற்றிய பிறகு அவையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
