72% இஸ்லாமியர்கள்... 59% கிறிஸ்துவர்கள்... 56% பட்டியலின மக்கள்... அமோக ஆதரவு... திமுக அபாரம்..!
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் வாக்குகளை மொத்தமாக திமுக அள்ளியிருக்கிறது.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், திமுகவுக்கு 56 % பட்டியலின மக்கள் ஆதரவு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அதிமுகவுக்கு 27% தான் பட்டியலின மக்கள் ஆதரவு அளித்திருப்பதாக எக்சிட் போல் முடிவில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் வாக்குகளை பொறுத்தவரை திமுக மொத்தமாக அள்ளிவிட்டது என்றே கூறலாம். இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவின் படி தமிழகத்தில் 72% இஸ்லாமியர்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிமுக வெறும் 10% முஸ்லீம்கள் மட்டுமே வாக்களித்துள்ளதாகவும் அந்த எக்சிட் போல் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலின மக்களும், இஸ்லாமியர்களும் திமுகவுக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளதை போல் கிறிஸ்துவர்களும் திமுகவுக்கே அதிகமான சதவீதம் வாக்களித்துள்ளனர். அதன்படி திமுகவுக்கு 59% கிறிஸ்துவர்களும், அதிமுகவுக்கு 23% கிறிஸ்துவர்களும் வாக்களித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ மற்றும் உவைசியின் மஜ்லிஸ் கட்சி இடம்பெற்றும் 4% இஸ்லாமியர்கள் மட்டுமே அந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பதும் எக்சிட் போல் முடிவில் தெரிய வந்துள்ளது. கிறிஸ்துவர்கள் மற்றும் பட்டியலின மக்கள் தலா 2% பேர் மட்டுமே இந்த தேர்தலில் அமமுகவுக்கு வாக்களித்துள்ளனர். இந்த விவரத்தையும் இந்தியா டுடே நிறுவனம் தனது எக்சிட் போல் முடிவில் தெரிவித்துள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு இஸ்லாமியர்கள் மத்தியில் 6% ஆதரவும், கிறிஸ்துவர்கள் மத்தியில் 5% ஆதரவும் கிடைத்திருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
மொத்தத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பட்டியலின மக்கள், என அனைத்து தரப்பட்டோரின் பேராதரவை திமுக பெற்றிருப்பது இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications