அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கார சார விவாதம்...வெளியேறிய வைத்திலிங்கம் - ஏன்? என்னாச்சு
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் கூட்டத்தில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் வெளியேறினார்.
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டநிலையில், கூட்டத்தில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி தேர்தல் 25 மாவட்டங்களில் நடைபெற்று முடிந்து உள்ளநிலையில், மீதமுள்ள 49 மாவட்டங்களில் உட்கட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா, இரண்டு கட்டமாக நடத்துவதா என்பது குறித்து அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.
அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் மாலை 6.30 மணியில் இருந்து நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார்,சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் மனோஜ் பாண்டியன் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கார சார விவாதம்
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே கார சார விவாதங்கள் நடைபெற்றன. பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து வரும் இந்த கூட்டத்தின் உள்ளே சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

விருட் என வெளியேறிய வைத்திலிங்கம்
வைத்திலிங்கம் வெளியேறும் போது அவரை சமாதானப் படுத்துவதற்காக அவரை பின்தொடர்ந்து சட்டசபை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் வந்தார். ஆனால் வைத்தியலிங்கத்தின் கார் நிற்காமல் சென்றுவிட்டது. வைத்திலிங்கத்தை சமாதானப்படுத்துவதற்காக, அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு சென்றார். ஆனால் அங்கு வைத்திலிங்கம் இல்லாததால் அவர் திரும்பி வந்தார். பின்னர் சமாதானமான வைத்தியலிங்கம் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார்.

ஜெயக்குமார் பேட்டி
அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாவது கட்ட உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்து, அனைவரும் கலந்தாலோசனை நடத்தினோம். எந்த வாக்குவாதமும் ஏற்படவில்லை, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

வைத்திலிங்கம் வெளியேறியது ஏன்?
அனைவரும் மகிழ்ச்சியாக வெளியே வந்ததை நீங்களே பார்த்தீர்கள். ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. வைத்தியலிங்கத்திற்கு வேலை இருந்ததால் சென்று விட்டார். மீண்டும் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று சிரித்துக்கொண்டே கூறினார் ஜெயக்குமார்.

சசிகலாவிற்கு சம்பந்தமில்லை
சசிகலாவை பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவுக்கு இருந்த வாக்கு வங்கி தற்போதும் நீடிக்கிறது. ஒருபோதும் அமமுகவின் வாக்கு வங்கி அதிமுகவை பாதிக்கவில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications