டிகே சிவக்குமாருடன் சேர்ந்து திமுக முட்டுக்கட்டை.. அவசரமாக மனு ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு நற்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக திமுக தரம் கெட்ட அரசியலில் ஈடுபடுவதாகவும், கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருடன் இணைந்து கொண்டு ஏதோ ஒரு வகையில் முட்டுக்கட்டை போடுவதாகவும் அமைச்சர் நிர்மல் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Cauvery issue DMK creating roadblocks with DK Shivakumar TN Minister Nirmal Kumar criticism

திமுக சொல்வதைத் தான் சொல்கிறார்

டிகே சிவக்குமாருக்கும் ஸ்டாலின் குடும்பத்திற்கும் கட்சியை தாண்டி ஒரு நல்ல உறவு இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள். பல வருடங்களாக இருவருக்கும் நல்ல உறவுகள் இருக்கிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று டிகே சிவக்குமார் விரும்பினார். காங்கிரஸ் தலைமை சொல்வதை கேட்பதை விட ஸ்டாலின் சொல்வதைத்தான் டிகே சிவாக்குமார் கேட்பார் என்று பல தரப்பினரும் கூறினார்கள்.

அதேதான் கடந்த ஒரு வாரம் நடந்தும் உள்ளது. திமுக சொல்வதைத்தான் டிகே சிவக்குமாரும் சொல்கிறார். காவிரி விவகாரத்தில் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் விஜய் நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, அனைத்து ஆலோசனைகளையும் நடத்தினார். இதற்கான பணிகள் நடக்கும் போது, திமுக அவசரமாக வழக்கை பதிவு செய்கிறார்கள்.

மாநில உரிமைகளை பின்னோக்கி தள்ளும்

ஒரே மாநிலத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்தால் எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கும். எந்த அளவு மாநிலத்திற்கான உரிமைகளை பின்னோக்கி தள்ளும். கடந்த 5 வருடமாக அவர்கள் என்ன செய்தார்கள். திமுக ஏதாவது ஒரு மனு தாக்கல் செய்ததா? காவிரி விவகாரத்தில் நமக்கு பல பின்னடைவு ஏற்பட திமுகதான் காரணம்.

தமிழக மக்களின் உரிமையை காக்க நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். டிகே சிவக்குமாருக்கும் திமுக தலைமைக்கும் இருக்கும் நெருங்கிய உறவு வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. தரம் கெட்ட நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+