காவிரி விவகாரம்: விஜய்யின் அடுத்த பிளான் என்ன? அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுமா? நிர்மல் குமார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவது தான் ஒரே தீர்வு என்றும், கர்நாடகாவில் யார் ஆட்சியில் இருந்தாலும் தண்ணீர் திறந்துவிடுவதில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். அனைத்து கட்சி கூட்டம் குறித்து முதல்வர் விஜய் முடிவெடுப்பார் எனவும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நமக்கு இருக்கின்ற ஒரே ஒரு ஆப்ஷன் உச்ச நீதிமன்றம் தான்.. மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கே இது பற்றி தெளிவு இல்லை. புரியவில்லை. தமிழகத்திற்கு விரோதி போல் பேசுகிறார். தமிழக அரசுக்கு எதிராக அவர் செயல்படுகிறார். கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக பேசுகிறார்.

Cauvery issue What is Vijay s next move Will an all-party meeting be convened Nirmal Kumar responds

மாநிலங்கள் இதில் எதுவும் செய்ய முடியாது. ஒன்றிய அரசு தான் இதில் செய்ய முடியும். கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், பாஜக இருந்தாலும், காங்கிரஸ் இருந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பது தான் அவர்களுடைய நோக்கம். கர்நாடக விவகாரத்தில் தண்ணீர் பெற ஒரே ஒரு தீர்வாக உச்ச நீதிமன்றம் தான் உள்ளது. இதில் என்ன செய்ய முடியுமோ அதனை இந்த அரசு செய்யும்" என்றார்.

அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் ஆட்சி தான் கர்நாடகாவில் நடக்கிறது. ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூறினால் அவர் திறந்துவிட போகிறார். ஏன் ராகுல் காந்தி பேசவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மல் குமார், இதே அன்புமணி தான் காங்கிரஸோடு கூட்டணியில் இருந்தார். அப்போது கெஜட்டில் நோட்டிபிகேஷன் வரும் போது என்ன செய்துகொண்டு இருந்தார்..

இப்போது இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினை என்றால் உச்ச நீதிமன்றத்தை நாடுவது தான் ஒரே தீர்வு.. அனைத்துக் கட்சி கூட்டம் எப்போது விஜய் நடத்துவார் என்று கேட்கிறீர்கள். அனைத்து கட்சி கூட்டம் குறித்து முதல்வர் விஜய் முடிவெடுப்பார்.. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+