வரும் ஜூன் 22இல் கூடும் காவிரி மேலாண்மை ஆணையம்.. முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார்.

Cauvery management authority will have a meeting on June 22

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு மாதம்தோறும் உரிய நீர் காவிரியில் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டம் கொரோனா பரவல் காரணமாகக் காணொலி வாயிலாக நடைபெறும்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+