ஒகேனக்கல் ஆற்றுக்கு நீர்வரத்து திடீர் உயர்வு! தமிழக எல்லையை வந்தடைந்த காவிரி!
சென்னை: தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு திடீரென நீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. அதே நேரம் தமிழக எல்லையை காவிரி நீர் வந்தடைந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக கர்நாடகா காவிரி கரையோரங்களில் கனமழை பெய்ததன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில் மழை குறைந்தால் நீர் வரத்தும் குறையும்.

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன் தினம் 5 ஆயிரம் கனஅடியாகவும் நேற்று 3 ஆயிரம் கனஅடியாகவும் வந்தது.
இந்த நிலையில் கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்தானது வினாடிக்கு சுமார் 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்தனர். கர்நாடகாவில் தீவிரமாக மழை பெய்து வருவதால், கர்நாடக அணையான கபினி அணையில் இருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுமார் 8000 கன அடி நீர் திறக்கப்பட்டது.
அந்த நீரானது தற்போது படிப்படியாக ஒகேனக்கல், பிலிகுண்டு பகுதிக்கு வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 6,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் எனது பார்க்கப்படுகிறது. நீர்வரத்து நிலவரங்கள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதனால் நீர்நிலைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. பாசனத்திற்கு ஆங்காங்கே அணைகளும் திறக்கப்படுகின்றன.
-
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
“காவிரி அரசியல் ஆயுதம் அல்ல!” கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு.. மாணிக்கம் தாகூர் கண்டனம் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா?












Click it and Unblock the Notifications