பொள்ளாச்சி பலாத்காரம்.. பொதுமக்களிடம் தகவல் கேட்கிறது சிபிசிஐடி.. இமெயில் ஐடி அறிவிப்பு
சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் ரகசிய தகவல் அளிக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக, திருநாவுக்கரசு உட்பட 4 பேர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர். இதன்பிறகு பாலா என்ற ஒரு வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி போலீசுக்கும் பிறகு சிபிஐக்கும் மாற்றப்பட்டது. இருப்பினும் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரித்தபடி உள்ளனர். இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசாரிடம் இதுகுறித்து தெரிவிக்கலாம் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம் என்றும், கேட்டுக் கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களும்கூட புகார் அளிக்கலாம்.
தகவல் அளிக்க கூடிய பொதுமக்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது. [email protected] என்ற இமெயில் முகவரிக்கோ, 800 அவினாசி சாலை, கோவை என்ற முகவரியிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரில் சென்றோ, பொதுமக்கள் விவரங்கள் தெரிவிக்கலாம்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications