தொடங்கியது சிபிசிஐடி விசாரணை.. திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் அதிரடி ரெய்டு
Recommended Video

சென்னை: பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி தனது விசாரணையை துவக்கி உள்ளது.
தமிழகத்தை உலுக்கிய, பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் மற்றும் அது சார்ந்த வீடியோ விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இதையடுத்து சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று பொள்ளாச்சியில் தனது விசாரணையை தொடங்கி உள்ளது. பொள்ளாச்சியில் உள்ள திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் ஏகப்பட்ட ஆணுறைகள் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனை முக்கியமானதாகும்.

இந்த வழக்கில் திருநாவுக்கரசு உட்பட நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாகவும், அரசியல் பின்புலம் மற்றும் ஆதரவு தொடர்பாகவும் சிபிசிஐடி விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உள்ளூர் காவல்துறை இதுவரை திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சோதனை நடத்தாமல் இருந்தனர் என்பது ஏன் என்பது புரியவில்லை. அதே நேரம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி இந்த விவகாரத்தில் சுதந்திரமாக விசாரிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிபிசிஐடி விசாரணை இன்று துவங்கியுள்ள நிலையில், அந்த விசாரணை எந்த கோணத்தில் செல்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் உற்று நோக்கி வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications