தவெக எதிர்பார்த்த மாதிரி இல்லை.. கிரில் செய்த சிபிஐ தலைகள்.. ஆதவ், புஸ்ஸி புகைச்சல்.. டார்கெட் விஜய்
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் சிபிஐ அலுவலகம் இருந்தாலும் கூட இவர்களை டெல்லி வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் கிரில் செய்து கொண்டு இருக்கின்றனர்.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.

இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ வசம் போனால்.. வழக்கு அப்படியே அமுங்கிவிடும்.. பொறுமையாகவே நகரும் என்று சிலர் வாதங்களை வைத்தனர். ஆனால் எதிர்பார்க்காத வண்ணம்.. இந்த முறை சிபிஐ மிக "சீரியஸ்" முறையை இந்த வழக்கில் கடைப்பிடித்து வருகிறது.
முக்கியமாக நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்டோரிடம் கடந்த இரண்டு நாட்களாக தினமும் 13 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் நடத்தினர். ஆனால் இவ்வளவு நேரம் விசாரணை நடத்தியும் கூட அது நிறைவு பெறவில்லை. கரூர் சிபிஐ அலுவலகத்தில் இன்றும் விசாரணை தொடர உள்ளது. அந்த அளவிற்கு வழக்கில் சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது.
டார்கெட் விஜய்
கரூர் வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தவெக தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா விசாரணைக்கு இடையே விஜயிடம் விசாரணை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
விஜயை டெல்லிக்கு அழைத்து விசாரணை செய்ய சிபிஐ திட்டம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த குழுவிடம் கரூர் வழக்கின் முதல் கட்ட ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி இந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்வார். கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணையின் போது இவரின் பதில் ரிப்போர்ட் தாக்கல் செய்யப்படும்.
சிபிஐ கேட்டது என்ன?
இன்று சிபிஐ விசாரணையில் பின் வரும் கேள்விகள் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி,
கரூர் கூட்டத்தில் பங்கேற்க தொண்டர்கள் எந்தெந்த மாவட்டங்களிலிருந்து வந்தனர்?
சென்னையிலிருந்து நாமக்கல் வழியாக கரூர் வந்த விஜயின் பயணத்திட்டத்தை வகுத்தது யார்?
செப்டம்பர் 27 அன்று மதியம் 3 மணிக்கு கூட்டம் நடக்க திட்டமிடப்பட்டிருந்தும், நண்பகல் 12 மணிக்கு பேசுவதாக அறிவிக்கச் சொன்னது யார்?
விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வந்தபோது, சரியான தகவல் அவரிடம் தெரிவிக்கப்படவில்லையா?
கூட்டத்தில் மயக்கமடைந்தவர்கள் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்ட பிறகும் விஜய் ஏன் தனது பேச்சைத் தொடர்ந்தார்?
கரூர் கூட்டத்தை கருதி, வேறு இடத்தில் கூட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்களா?
காவல்துறை அறிவுறுத்தல்களை மீறி, கூட்ட நெரிசலுக்குள் பேருந்தை நகர்த்த உத்தரவிட்டது யார்?
நண்பகல் 12 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டு, விஜய் இரவு 7 மணிக்கு வர காரணம் என்ன?
தொண்டர்களின் வருகையையும், மற்ற ஏற்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பிலிருந்த நிர்வாகிகள் யார்?
கூட்டத்தை பெரியதாகக் காட்ட வேண்டும் என்பதற்காக இந்த தாமதம் திட்டமிட்டதா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
சிபிஐ விசாரணையின்போது, நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த அதே பதில்களை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு!










Click it and Unblock the Notifications