பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!
சென்னை: "கூட்டணிக்கு வர்றீங்களா... இல்லை கடையைச் சாத்துறீங்களா?" - இது ஏதோ ஒரு சாதாரண அரசியல் உரையாடல் அல்ல. தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய்க்கு டெல்லியிலிருந்து 'அழுத்தமாக' வந்திருக்கும் மெசேஜ் என்கிறார்கள் விவரம் அறிந்த தவெக தம்பிகள்.
கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் த.வெ.க சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் வைத்து விஜய்யிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு அவர் தாமதமாக வந்தது ஏன்? பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் யாருடைய தவறு? என்பது குறித்து ஏற்கனவே கேள்விகள் எழுப்பப்பட்டன. தற்போது இறுதிக்கட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும் முனைப்பில் இருக்கும் சி.பி.ஐ, சில முக்கியத் தகவல்களை உறுதிப்படுத்த விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
கரூரில் கடந்த ஆண்டு நடந்த அந்த துரதிர்ஷ்டவசமான நெரிசல் விவகாரம், இப்போது விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியிருப்பதுதான் கோலிவுட் முதல் கோட்டை வரை ஹாட் டாபிக்.
65 சீட் 'ஆஃபர்'... பின்னணியில் மிரட்டல்?
2026 சட்டமன்றத் தேர்தலுக்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) பலப்படுத்தத் துடிக்கும் டெல்லி மேலிடம், விஜய்யை எப்படியாவது தங்கள் வலைக்குள் இழுக்கக் காய் நகர்த்தி வருகிறது. "உங்களுக்கு 65 தொகுதிகள் ஒதுக்குகிறோம். நீங்கள் எங்கள் பக்கம் வாருங்கள்" என்பதுதான் டெல்லி வைத்திருக்கும் அந்த டீல்.
ஆனால், இந்த டீலை விஜய் ஏற்கத் தயங்குவதாகத் தகவல். இதனால் கடுப்பான டெல்லி தரப்பு, "ஒன்று கூட்டணிக்கு வாருங்கள், இல்லையென்றால் அரசியலை விட்டே ஒதுங்குங்கள்" என மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் த.வெ.க-வின் ரத்தத்தின் ரத்தங்கள் ரகசியமாகப் பேசிக்கொள்கிறார்கள். விஜய் எதிர்க்கட்சி வாக்குகளை பிரிப்பதை பாஜக விரும்பவில்லை. இதை தடுக்கவே கூட்டணி இல்லையென்றால் நோ அரசியல் என்று டெல்லி பிரஷர் போட முடிவு செய்துள்ளதாம்.
அரசியல் அஸ்திரமான சி.பி.ஐ சம்மன்!
இந்த அழுத்தத்தின் ஒரு பகுதிதான் மார்ச் 10-ஆம் தேதி விஜய்க்கு விடுக்கப்பட்டுள்ள சி.பி.ஐ சம்மன் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கரூர் விபத்து வழக்கைக் கையில் எடுத்துள்ள சி.பி.ஐ, விஜய்யைச் சுற்றி மெல்ல மெல்ல வலை விரிக்கத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே டெல்லியில் வைத்து மணி கணக்கில் விசாரணை நடந்தது.
மீண்டும் விசாரணைக்கு அழைப்பதன் மூலம், விஜய்யின் பிரசார வேகத்தைக் குறைக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா? கூட்டணிக்கு இணங்கவில்லை எனில், அடுத்தகட்டமாக 'கடுமையான' நடவடிக்கைகள் பாயலாம் என்ற எச்சரிக்கை மணிதான் இந்த சம்மன் என்கிறது அரசியல் ஆலோசகர்கள் வட்டாரம்!
நிர்வாகிகளின் பதற்றம்!
"கட்சி ஆரம்பிக்கும்போது இருந்த அந்தத் தெளிவு இப்போது இல்லை. டெல்லி கொடுக்கும் நெருக்கடி ஒரு பக்கம், மறுபக்கம் விவாகரத்து பிரச்சனை எனத் தலைவர் ரொம்பவே அப்செட்" எனப் புலம்புகிறார் தவெக முக்கிய நிர்வாகி ஒருவர். பெண்களுக்கான உதவித்தொகை, இலவச சிலிண்டர் என விஜய் கொடுத்த பாப்புலிச திட்டங்கள் எடுபடுமா அல்லது இந்த சி.பி.ஐ மிரட்டலில் கட்சி கரைந்து போகுமா என்ற கவலை தொண்டர்களிடம் தொற்றிக்கொண்டுள்ளது. பாஜக கூட்டணிக்கு எல்லாம் போனால் மாற்று அரசியல் என்ற அஸ்திரம் உடைந்து போகும் என்றும் விஜய்க்கு வார்னிங் சென்றுள்ளதாம்.
அமித் ஷா தரப்பிலிருந்து வந்திருக்கும் இந்த 'டெட்லைன்' மார்ச் 10-ஆம் தேதி சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகு என்னவாக மாறப்போகிறது? விஜய் 'பணிவாரா' அல்லது 'துணிவாரா'? மார்ச் 10-ஆம் தேதி கரூர் விவகாரத்தில் விஜய் அளிக்கப்போகும் வாக்குமூலம், தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்புவது உறுதி!
-
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா?












Click it and Unblock the Notifications