சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.cbseresults.nic.in. என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in. என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இது குறித்து அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது அருமை குழந்தைகளே, பெற்றோர்களே, ஆசிரியர்களே, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது அனைத்து மாணவர்களுக்கும் பெஸ்ட் ஆப் லக் என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற்றன. சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டு வந்தது.

தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதியை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள் 2020 நாளை அதாவது ஜூலை 15, 2020 அன்று அறிவிக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, results.nic.in, cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications