சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: மண்டலம் வாரியாக தேர்ச்சி விகிதம் எவ்வளவு.. சென்னை எத்தனையாவது இடம்
சென்னை: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவிகிதத்தில் சென்னை மண்டலம் 3 ஆம் இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் விஜயவாடாவும், கடைசி இடத்தில் உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜ்ஜும் இடம் பெற்றுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. இதனால் சிபிஎஸ்இ முடிவுகள் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் இன்று மதியம் வெளியானது. நாடு முழுவதும் உள்ள 19,299 பள்ளிகளைச் சேர்ந்த 17,04,367 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதில், 14,96,307 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதாவது நடப்பு ஆண்டில் மொத்தம் 88.39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 87.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்து இருந்தனர். கடந்த ஆண்டை விட தற்போது 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது.
மண்டலம் வாரியாக பார்த்தோம் என்றால் எப்போதும் தேர்ச்சி விகிதத்தில் டாப்பில் இருக்கும் திருவனந்தபுரத்தை பின்னுக்கு தள்ளி, விஜயவாடா முதலிடத்தை பிடித்தது. வழக்கம் போல் இந்த முறையும் டாப் 3 பட்டியலில் சென்னை இடம்பிடித்துள்ளது. சென்னை மண்டலம் இந்த முறை 97.39 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் பெற்று 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
மண்டலம் வாரியாக தேர்ச்சி விகிதம்:
* விஜயவாடா - 99.60
* திருவனந்தபுரம் - 99.32
* சென்னை - 97.39
* பெங்களூர் - 95.95
* டெல்லி மேற்கு - 95.37
* டெல்லி கிழக்கு - 95.06
* சத்தீஸ்கர் - 91.61
* பஞ்ச்குலா - 91.17
* புனே - 90.93
* அஜ்மர் - 90.40
* புபனேஸ்வர் - 83.64
* கவுகாத்தி - 83.62
* டேராடூன் - 83.45
* பாட்னா - 82.86
* போபால் - 82.46
* நொய்டா - 81.29
* பிரக்யாராஜ் - 79.53.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications