சிபிஎஸ்இ 12ம் வகுப்பு ரிசல்ட்.. டாப் 3ல் சென்னை.. பின்தங்கிய வடமாநிலங்கள்.. முழு விவரம்!
சென்னை: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில் கடந்த ஆண்டை விடவும் நடப்பாண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் தேர்ச்சி சதவிகிதங்களில் வட மாநிலங்களை விடவும், தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மண்டல வாரியாக பெற்ற தேர்ச்சி சதவிகிதங்களை பார்க்கலாம்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மொத்தமாக தேர்வு எழுதிய 16 லட்சத்து 92 ஆயிரத்து 794 மாணவர்களில், 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 மாணவர்கள் தேர்ச்சு பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டில் மாணவிகள் 91.64 சதவிகிதமும், மாணவர்களில் 85.70 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக தேர்ச்சி ச6தவிகிதம் 88.39 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 87.98ஆக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும் போது 0.41 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மண்டல வாரியாக சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதத்தில் சென்னை மண்டலம் 3வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் விஜயவாடா 99.60 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடத்தில், திருவனந்தபுரம் 99.32 சதவிகித தேர்ச்சியுடன் 2வது இடத்திலும், சென்னை மண்டலம் 97.39 சதவிகித தேர்ச்சியுடன் 3வது இடத்திலும், பெங்களூர் மண்டலம் 95.95 சதவிகித தேர்ச்சியுடன் 4வது இடத்திலும் உள்ளது.
முதல் 4 இடங்களையும் தென் மாநிலங்களே பிடித்துள்ளன. தொடர்ந்து மேற்கு டெல்லி மண்டலம் 95.37 சதவிகிதமும், கிழக்கு டெல்லி 95.06 சதவிகிதமும், சண்டிகர் 91.61 சதவிகிதமும், பஞ்ச்குலா 91.17 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளன. தொடர்ந்து புனே மண்டலத்தில் 90.63 சதவிகித தேர்ச்சியும், அஜ்மீர் மண்டலம் 90.40 சதவிகித தேர்ச்சியும், புவனேஷ்வர் 83.64 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளன.
அதேபோல் கவுகாத்தி மண்டலம் 83.62 சதவிகித தேர்ச்சியும், டேராடூன் 83.45 சதவிகித தேர்ச்சியும், பாட்னா 82.86 சதவிகித தேர்ச்சியும், போபால் 82.46 சதவிகித தேர்ச்சியும், நொய்டா 81.29 சதவிகித தேர்ச்சியும், பிரயாக்ராஜ் 79.53 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் கடைசியில் இருப்பது விவாதமாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications